தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சிம்பு . என்னதான் திரைத்துறையினர் இவர் மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தினாலும் , ரசிகர்கள் சிம்புவை நேசிப்பதில் இருந்து பின்வாங்கியதே இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி , பொது வாழ்க்கையாக இருந்தாலும் சரி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இயல்புடையவர் நடிகர் சிம்பு. அதுவே அவரை பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணமாக இருக்கலாம். சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்க முடியாமல் ரெட் கார்டை பெற்றார் சிம்பு. அதன் பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதே சமயம் சிம்புவின் உடல் எடை குறித்த விமர்சனங்களும் எழுந்தன. அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் உடன் எடை தாறுமாறாக குறைந்து முற்றிலும் மாறுபட்ட சிம்புவாக திரையில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கிட்டத்தட்ட 101 கிலோவில் இருந்து தற்போது 70 கிலோவாக சிம்பு எடையை குறைத்திருக்கிறார்.
சிம்பு மாநாடு படத்தை முடித்த கையோடு , உடல் எடையை கூடுதலாக குறைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் இணயத்தை மிரள வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல மிந்த்ரா என்னும் ஆன்லைன் ஆடை வர்த்தக நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனமும் , நடிகர் சிம்புவும் பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக இந்த நிறுவன விளம்பரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் ஹிரித்திக் ரோஷன், கியரா அத்வானி, சமந்தா, விஜய் தேவரகொண்டா,துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அவர்களை காட்டிலும் சிம்பு நடித்த இந்த விளம்பர படம் அதிகமானோரால் ட்விட்டரில் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது மற்றும் அதிக லைக்குகளை குவித்துள்ளது. வெளியான 19 மணிநேரத்தில் 431 ரீ-ட்வீட்டை பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் பல்வேறு கெட்டப்புகளில் ட்ரெண்டிங்கில் அசத்தலாக வலம் வரும் சிம்புவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறினார் சிம்பு. பின்னர் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு ‘சிலம்பரசன் டிஆர்’ என்ற பெயரில் மீண்டும் கணக்குகளை தொடங்கினார். குறிப்பாக கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்குகளை தொடங்கியிருந்தார் சிம்பு. ஒரு வருடத்திற்குள்ளாக 3 மில்லியன் ஃபாலோவர்ஸை தனது இன்ஸ்டா பக்கத்தில் பெற்றுள்ளார் சிம்பு. இதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட நடிகர் என்ற பெருமையையும் சிம்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.