இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படம் மூலம் கோலிவுட்ல ஹீரோவாவும் வெற்றி கண்டவர். அவர் அடுத்ததாக ஹீரோவா நடிக்கற படம் டிராகன். ஓ மை கடவுளே படத்த இயக்குன அஸ்வத் மாரிமுத்து இயக்கற இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்குறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்த தயாரிக்குது. இந்த படத்துல, சிம்பு ஒரு பாடல பாடியிருக்கார். அதுக்கு ஒரு ப்ரோமோ வீடியோவும் எடுத்து ரிலீஸ் பண்ணியிருக்கார் படத்தோட இயக்குநர். இத பத்திதான், பிரதீப் ஒரு அருமையான ட்வீட்ட பண்ணியிருக்கார்.


டிராகன் படத்தின் பாடல் பதிவு ப்ரோமோவில் நடித்த சிம்பு


டிராகன் படத்துக்காக ஒரு பாடல் பதிவுக்கு வந்த சிம்பு, அதுக்கான விளம்பர படத்துலயும் நடிச்சு கொடுத்துருக்கார். படத்தோட இயக்குநரும் அவரும் உரையாடுற மாதிரி எடுக்கப்பட்ட அந்த வீடியோவுல, இயக்குநர் சிம்புவ பாட வைக்க அவர கன்வீன்ஸ் பண்ற மாதிரியும், பல முறை மறுத்து, கடைசில சிம்பு பாட ஒத்துக்கற மாதிரியும் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுருக்கு.


சிம்புவை புகழ்ந்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்


சிம்பு நடிச்ச ப்ரோமோ வீடியோ நேத்து இரவு வெளியாகி வரவேற்ப பெற்றுட்டு வர்ற நிலையில, அந்த ப்ரோமோவ போட்டு பிரதீப் ரங்கநாதன் ஒரு சூப்பரான ட்வீட் பண்ணியிருக்கார். அதுல,


"வேற ஒருத்தரோட ப்ரோமோல நடிக்குறதுனால உங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது.? என்ன கிடைக்கும்னு யோசிக்காம, என்ன குடுக்கலாம்னு யோசிக்குறவன் மாஸ்.. நீங்க மாஸ் சார்... தங்க மனசு STR" பாடல் பாடியதற்கு நன்றி அப்படீன்னு நெகிழ்ச்சியா பதிவு பண்ணியிருக்கார்.






ஏற்கனவே டிராகன் படத்தோட 2 பாடல்கள் வெளியாகி வரவேற்ப பெற்றிருக்கற நிலையில், இந்த படத்துக்காக சிம்பு பாடியிருக்கற ஏன்டி விட்டு போன அப்படீங்கற பாடல், நாளை(28.01.25) வெளியாக இருக்கு.