நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்த பத்து தல திரைப்படம் ஓடிடியில் வெளியானது.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளியான பத்து தல திரைப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை'படத்துடன் நேரடியாக மோதியது. 


மேலும், சந்தோஷ் பிரதாப், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, அனு சித்தாரா, டீஜே, கலையரசன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணல் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் மாஸ் அவதாரத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 


கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி' படத்தின் ரீமேக் பத்து தல எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  இந்தப் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தமிழில் வெளியானது.


ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வரிசையில் இந்தப் படமும் ஹிட் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 55 கோடி வசூலித்துள்ளது. 


இந்நிலையில் 'பத்து தல' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.  


கன்னட ஒரிஜினல் படமான முஃப்தி அளவுக்கு பத்து தல திரைப்படம் இல்லை என ரசிகர்கள் விமர்சனங்களையும் முன்வைத்த நிலையில், திரையரங்கில் வெளியாகி  நான்கே வாரங்களில் ஓடிடி தளத்தில் தற்போது 'பத்து தல' திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.