தக் லைஃப் (Thug Life)


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமானார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு சைபீரியாவில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா உள்ளிட்டவர்களின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் பிஸியாக, படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது . இதனால் கால்ஷீட் இல்லாமல் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதாக முன்னதாகத் தகவல் வெளியானது. 


தக் லைஃப் படத்தில் சிம்பு






தற்போது இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் ‘எஸ்.டி.ஆர் 48’ படத்தில் நடிக்க இருந்தார் சிலம்பரசன்.


தற்போது தக் லைஃப் படத்தில் அவர் இணைந்துள்ளதாகவும், இதனால் எஸ்.டி.ஆர் 48 படம் இன்னும் சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கெனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்தார். தற்போது எதிர்பாராத இந்த வாய்ப்பு மூலமாக இரண்டாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் நடிக்க இருக்கிறார்.


வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சிலம்பரசனின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.  இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.