தமிழில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில், அதேபோல ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

Continues below advertisement

இதன்படி, ஓடிடி தளத்தில் நாளை(30-10-2026) வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. பத்தா:

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பத்தா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கிய இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.

Continues below advertisement

2. சிக்மா:

நடிகரும், முதலமைச்சருமான விஜய்யின் மகனாகிய ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கிய திரைப்படம் சிக்மா. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த படம் திரையரங்கில் பெரிய வெற்றி பெறவில்லை. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

3. இம்மார்டல்:

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள திரைப்படம் இம்மார்டல். ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள இந்த படம் ட்ராகுலா பேய் திரைப்படம். திரையரங்குகளில் கடந்த 4ம் தேதி வெளியான இந்த படம் கலவையான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற நிலையில், நாளை சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

4. டார்க் ஹெவன்:

பாலாஜி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் இந்த டார்க் ஹெவன். தமிழ் கிரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த படம் அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகிறது. க்ரைம் த்ரில்லர் படமான இந்த படம் திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

5. லவ் ஆல்வேஸ்:

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஏராளமான வெப்சீரிஸ்கள் வெளியாகி வருகிறது. நாளை லவ் ஆல்வேஸ் என்ற புதிய தமிழ் வெப்சீரிஸ் வெளியாகிறது. 

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் உருவாகிய திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அக்கா என்ற இந்தியில் உருவான வெப்சீரிஸ், அவரச்சன் அன்ட் சன்ஸ் மலையாள திரைப்படம், டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் என்ற தெலுங்கு படமும் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. 

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள அக்கா வெப்சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஃபகத் பாசில் நடித்த டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. மிர்சாபூர் தி மூவி திரைப்படம் அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகிறது.