இந்தியன் 2 படம் பற்றி எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருக்கிறார் ஷங்கர். இந்நிலையில் இந்தியன் 2 பற்றி சித்தார்த் தெரிவித்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் சித்தார்த் சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 படமோ விக்ரமை விட பெரிய அளவில் வெற்றி பெறும் போலயே என்கிறார்கள் கமல் ரசிகர்கள்.
கமல்ஹாசனுடன் நடிக்கும் சித்தார்த்:
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியிருக்கும் டக்கர் படத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். ஜூன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள டக்கர் படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சித்தார்த். இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் போது நடிகர் சித்தார்த் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியன் 2 படம் பற்றி அவர் சொன்ன விஷயம் கமல் ஹாசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார் நடிகர் சித்தார்த்.
ஆசிர்வாதம்:
இந்நிலையில் இந்தியன் 2 படம் பற்றி சித்தார்த் பேசியதாவது: இது வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் அனுபவமாக நினைக்கிறேன். அந்த படத்தை எந்த மொழியில் ரிலீஸ் செய்தாலும் பிளாக்பஸ்டர் தான். அந்த படத்தில் நடிக்குமாறு எனக்கு அழைப்பு வந்ததையே ஆசிர்வாதமாக நினைக்கிறேன். என்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குநருடன் சேர்ந்து வேலை செய்கிறேன். இயக்குனர் ஷங்கர் என்னை நடிகர் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வைத்திருப்பது வேற லெவல். என்னை மீண்டும் அழைத்ததற்காக ஷங்கர் சாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மேலும், கமல் சார் மீதான அன்பு தான் என்னை நடிகனாக்கியது. அவரை ஒவ்வொறு முறை சந்திக்கும்போதும் நான் கொடுத்து வைத்தவன் என நினைத்துக்கொள்வேன். தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெரிய விஷயம். ஷங்கர் சார் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தபோது பேச்சே வரவில்லை. அதுவும் இந்தியாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றான இந்தியன் 2-வில் நடிக்க அழைத்தார். இந்தியன் 2 படம் பற்றி பேச ஆரம்பித்தால் குறைந்தது இரண்டு மாதங்களாவது பேசிக் கொண்டே இருப்பேன்.
10 மடங்கு பெரியது:
கமல் ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இரண்டு ஜாம்பவான்களை பற்றியது இந்தியன் 2. கமல் ஹாசன் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தியன் 2 படம் நீங்கள் நினைப்பதை விட 10 மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன்”. நடிகர் சித்தார்த் தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் இருக்கும். அதுவும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார் என்றால் சொல்லவா? வேண்டும். இந்த இரண்டு காரணங்கள் தான் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.ஆனால் இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில் இந்தியன் 2 பற்றி சித்தார்த் பேசிய விஷயம் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.