தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல ஆண்டுகளாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் தான் ரகசியமாக அவர்களின் நிச்சயதார்த்தத்தை கோயிலில் வைத்து முடித்து கொண்டனர். அவர்கள் அது குறித்த அறிவிப்பை பொதுவில் வெளியிடுவதற்கு முன்னரே இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துவிட்டது என வதந்திகள் சமூக வலைத்தளம் எங்கும் வைரலாக பகிரப்பட்டன. ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் அவர்களின் நிச்சயதார்த்த மோதிரங்களுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நிச்சயம் முடிந்துவிட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டனர். 


 




தற்போது தன்னுடைய வருங்கால மனைவியுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த் தற்போது இத்தாலியில் காதல் பயணம் மேற்கொண்டுள்ளார். இருவரும் இத்தாலியில் உள்ள டஸ்கானி என்ற இடத்தில் சைக்கிளில் சுற்றி வருவதும், இயற்கை அழகு கொஞ்சும் பல இடங்களில் அவர்களின் இனிமையான பயணத்தை மேற்கொள்ளும் வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அவர்களின் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் ஹார்டின்களையும் சிதறவிட்டு வருகிறார்கள். 


 






 


தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி மாலை நடைபெற்றது.     


மலையாள ஸ்டார் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் ஆடியோ லான்ச் விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் சித்தார்த் மற்றும் அதிதி இத்தாலியில் உல்லாச சுற்றுலா சென்றுள்ளது தான் காரணமா என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் சித்தார்த் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.