எட்டு தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 3 BHK. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலரிலேயே மிடில் கிளாஸ் பேமிலியின் கனவாக இருப்பது வீடுதான் என்பதை எதார்த்தமாக காட்டியிருந்தார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா என்பதை இங்கு காணலாம்.
3 BHK ட்விட்டர் விமர்சனம்
இப்படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருவர், அப்பாவும் வீடும் ஒரு உனிவர்சல் கனவு தான். இது இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. கண்டிப்பா ஒவ்வொரு வீட்டில் இருக்கிற அனைத்து குடும்பத்தினருக்கும் இப்படம் பிடிக்கும். மிகவும் அழகாக இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகணேஷ் கொடுத்திருக்கிறார். சில காட்சிகள் காரணம் புரியாமல் கண்களில் கண்ணீரை வரவைக்கும். சித்தார்த் சார் பயங்கரமா நடித்திருக்கிறார். சரத்குமார், தேவயானி மேடம் சான்ஷே இல்லை. ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சூர்ய வம்சம் படம் பார்த்தது மாதிரி பீல் வருகிறது என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
சினிமாத்தனம் இல்லாத நிஜ வாழ்க்கை
3 BHK திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே அதிகம் வந்துள்ளன. இப்படத்தை பார்த்த ரசிகர் !ஒருவர், நடுத்தர குடும்பத்து அல்லது கஷ்டத்தை அனுபவிக்கிற அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயானியும், வாழ்கை, வேலை, பணத்துடன் போராடுகிற இளைஞனாக சித்தார்த்தும், பாசக்கார தங்கையாக மீதாவும், மாறுபட்ட நடிப்பில் சைத்ராவும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். பல சீன்கள் சினிமாத்தனம் இல்லாமல் நம் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. நாம் வாழ்ந்த வாடகை வீடுகளை, ஹவுஸ் ஓனர்களை, பில்டர்களை, பேங்க் ஆபீசர்களை, புரோக்கர்களை, சொந்த வீடு வாங்கிய அனுபவங்களை இந்த படம் நினைவுபடுத்தும், பல இடங்களில் பீல் பண்ண வைக்கும். இயக்குனர் ஸ்ரீகணேஷ் கலக்கியிருக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கண் கலங்காமல் இருக்க மாட்டீங்க
சொந்த வீடு என்பது மிகப்பெரிய மரியாதை என்பதை ஆழமாகச் சொல்லி இருக்கிறது. இந்த படத்த பார்த்துட்டு குறைந்தது 4 இடத்திலாவது நீங்க கலங்குவிங்க. பல காட்சிகளில் உங்களை நீங்கள் தொடர்புப்படுத்தி கொள்ளலாம் , சித்தாவுக்கு அடுத்த படமாய் சித்தார்த்துக்கு இது வந்திருக்கலாம். ரொம்ப டச்சிங்காக இருக்கிறது. குடும்பத்துடன் மிஸ் பண்ணாம பாருங்க என்றும் தெரிவித்துள்ளனர். சித்தா படத்திற்கு பிறகு சித்தார்த்திற்கு இப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் ரசிகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.