தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ருதிஹாசன் . தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சமீக காலமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், மனம் திறந்து நிறைய விஷயங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொள்ள தொடங்கியுள்ளார். சமீபத்தில் கூட நேர்காணல் ஒன்றில் தான் மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், தனது சிறு வயது பிரபலங்களின் மகள் என்ற அங்கீரம் தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்பதையும் தெரிவித்திருந்தார்.மேலும் தான் மனம் விட்டு தன் தந்தை கமல்ஹாசனுடன்  கடந்த 5 வருடங்களாகத்தான் பேச முடிகிறது எனவும் கூறியிருந்தார். 






இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் ”நான் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன், மேலும் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதே எனது மிகப் பெரிய பாடம்.இதெல்லாம் உங்களுக்கு தெரியும் நாளில் .. வீடியோ கேம் போல நீங்கள் அடுத்த லெவலுக்கு செல்கிறீர்கள் ... லெவல் அப் செய்யுங்கள்.. ஈகோ குறையும். ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் உள்ளது, இதை சொல்வதற்கு நான் பிரசங்கவாதி இல்லை ...இருந்தாலும் சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


ஸ்ருதிக்ஹாசன் தற்போது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.கோபிசந்த் மாலினேனி  இயக்கும் புதிய படத்தில் நாயகனாக பாலகிருஷ்ணா நடிக்க , நாயகிகாக நடிக்கிறாராம் ஸ்ருதி.அந்த படம் பாலகிருஷ்ணாவின் 107 வது படமாக உருவாகி வருகிறது. தற்போது அந்த படத்தின் முதற்க்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் முன்னதாக வெளியான 'க்ராக்' என்ற படத்திலும்  ரவி தேஜாவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஓவியரான  சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஸ்ருதிஹாசன் முன்னதாக  இத்தாலியை சேர்ந்த மைக்கல் கோர்ச்சல் என்பவரை காதலித்து வந்தார் என்பது , அவர்களுக்கு பிரேக் அப் ஆனதும் குறிப்பிடத்தக்கது.