பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ நான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வளர்சிதை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்வது உண்மையில் கடினமான போராட்டம் என்பது பெண்ணுக்குத் தெரியும். ஆனால் இதை நான் போராட்டமாக பார்க்கவில்லை. மாறாக எனது உடலின் இயற்கையான நிகழ்வு என்பதை புரிந்து கொண்டு அதை ஏற்க தயாராகி விட்டேன்.
எனது உடல் முடிந்த மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. சரியாக சாப்பிடுவதற்காக, நன்றாக தூங்குவதற்காக, முறையாக வொர்க் அவுட் செய்வதற்காக அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னுடைய உடல் தற்போது ஒழுங்காக இல்லைதான். ஆனால் என்னுடைய உள்ளம் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் ஓடட்டும்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்னைகளில் பிசிஓடியும், எண்டோமெட்ரியோசிஸும் இடம்பெறுகிறது. இந்தப்பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஆனால் முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதை குணப்படுத்த முடியும்