பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் தனக்கென தனி இடத்தையே வைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை சமூகவலைதளங்களில் உங்களுக்கு இந்தி தெரியுமா என்று ட்ரோல் செய்ய அவர்களை விளாசியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.


இன்ஸ்டாகிராமில் அண்மையில் ரசிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார் ஸ்ருதிஹாசன். அப்போது ஒருவர் தெற்கிலிருந்து வருவதால் உங்களுக்கு இந்தி தெரியுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்ருதி ஹாசன், நீங்கள் எப்போதும் என்னிடம் சில கேள்விகளைக் கேட்கவே கூடாது. அதிலொன்று நீங்கள் இந்தி பேசுவீர்களா என்ற கேள்வி. தெற்கு ஒன்றும் வேறு கிரகம் இல்லையே. நாங்கள் எல்லோரும் திரைத்துறையில் உள்ளோம். இதில் எந்தவித முன்முடிவுகளுக்கும் நேரமில்லை. இது 2022 இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.


ஸ்ருதி ஹாசன் 2009ல் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். தேவார், தில் தோ பச்சா ஹை, ஜி, டி டே, வெல்கம் பேக், ராக்கி, ஹேண்ட்ஸம், பெஹன் ஹோகி தேரி, கப்பார் சிங் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பெஸ்ட் செல்லர் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரபர்த், அர்ஜன் பாஜ்வா, கவுஹார் கான், சத்யஜீத் துபே, சோனாலி குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர்.


பெஸ்ட் செல்லரில் ஒப்பந்தமானது குறித்து ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில், "சித்தார்த் மல்ஹோத்ரா என்னிடம் பெஸ்ட்செல்லர் படத்திற்காக அணுகியபோது நான் நிறைய ப்ராஜக்ட்டில் கமிட் ஆகியிருந்தேன். ரொம்பவும் பரபரப்பாகவே இருந்தேன். என்னால் அதில் ஒப்பந்தமாக முடியுமா என்று இரண்டு மனதில் இருந்தேன். ஆனால் அந்த ஸ்க்ரிப்பட்டை வாசித்தவுடன் முடிவு செய்துவிட்டேன். இதை விட்டுவிடக்கூடாது என்ற மனதுக்கு வந்தேன். கதையில் இருந்து அடுக்குகள் அப்படி என்ன வசீகரம் செய்தது. எனது கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்" என்று கூறியிருந்தார்.


இது தவிர தெலுங்கில் சலார் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் தெலுங்கு திரையுலகில் அதிகரித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் "சலார்". சலார் என்றால் "தலைவன்" என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன்.  


கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்குவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. மேலும் சலார் படத்தை கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இசை, திரைப்படம், வெப் சீரிஸ் என எப்போதும் படுபிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அத்தனை பரபரப்புக்கும் இடையே தன்னை ட்ரோல் செய்தவர்களை வறுத்தெடுக்கத் தயங்கவில்லை.