தமிழ் , இந்தி , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , பெங்காலி , பிரெஞ்சு என கிட்டதட்ட 8 மொழிகளைப் பேசக்கூடியவர் கமல். ஆனால் இதில் சில மொழிகளை அவர் சினிமாவுக்காக கற்றுகொள்ள வில்லை. நடிகர் சத்யராஜூடனான உரையாடலின் போது இந்த தகவலை கமல் பெங்காலி மொழி கற்றுக் கொண்டதன் காரணத்தை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்
அபர்ணா சென் மீது கமல் காதல்
பிரபல பெங்காலி நடிகை மீது தனது தந்தைக்கு காதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் பெங்கலி மொழியை படித்து கற்றுக் கொண்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். " சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்
கமல் காதல் உறவுகள்
கமலின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்துள்ளது. 1978 ஆம் ஆண்டு கமல் நாட்டிய கலைஞர் வானி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவில் இந்தபோதே கமல் நடிகை சாரிகாவை காதலித்து வந்தார். திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பின் 1988 இல் கமலும் வானி கணபதியும் பிரிந்தனர். வானி கணபதியுடனான விவாகரத்தைத் தொடர்ந்து கமல் சாரிகாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 1986 ஆம் ஆண்டு மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் 1991 ஆம் ஆண்டு இளைய மகள் அக்ஷரா ஹாசனும் பிறந்தார்கள்.
2004 ஆம் ஆண்டு கமலும் சாரிகாவும் பிரிந்தனர். அவரைப் பிரிந்ததைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் நடிகை கெளதமியுடன் கமல் இணைந்து வாழத் தொடங்கினார். கெளதமிக்கு ஏற்கனவே சுப்பலக்ஷ்மி இருந்தார். 11 ஆண்டுகள் கழித்து கெளதமி கமலை பிரிந்து தனியாக வாழ முடிவு செய்தார் .
கமல் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் வெளியானது. அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜியுடன் கமல் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன