பானுப்ரியா ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 155 படங்களில் நடித்துள்ளார். இவர் பரதநாட்டிய கலைஞரும் கூட. அதனால், ஒரு சில படங்களில் டான்ஸ் ஆடும் ரோல்களில் நடித்திருந்தார். மெல்ல பேசுங்கள் படத்தில் ஆரம்பித்து அயலான் வரை பல படங்களில் நடித்த பானுப்ரியா இப்போது சினிமாவில் இருந்தே ஒதுங்கி உள்ளார். வாய்ப்புகள் வந்தாலும் மறதி பிரச்சனை காரணமாக, டயலாக் சொல்லமுடியாமல் அவதி படுவதே இவரின் நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

Continues below advertisement

 பொதுவாக சினிமா என்று எடுத்துக் கொண்டால் நடிகர் நடிகைகளின் கெமிஸ்டரி எந்தளவிற்கு ஒர்க் அவுட்டாகிறது என்பதை பார்ப்பார்கள். அப்படி ஒர்க் அவுட்டாகிவிட்டால், அவர்களது காம்பினேஷனில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும். அப்படித்தான் கார்த்திக் மற்றும் பானுப்ரியா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட்டானது. இதன் காரணமாக இவர்கள் இணைந்து கோபுர வாசலிலே, சக்கரவர்த்தி, பாடும் பறவைகள்(அன்வேஷனா), அமரன் என்று பல படங்களில் நடித்தனர். 

Continues below advertisement

கார்த்திக் ஒரு பிளே பாய். எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களை ஈசியாக தன் காதல் வலையில் வீழ்த்தி கரெக்ட் பண்ண ரூட் போடுவார். அப்படித்தான் பானுப்ரியாவிற்கும் ரூட் போட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சக்கரவர்த்தி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுசுக்கு பானுப்ரியா சென்றால் ஷூட்டிங் நடக்காது. இதனால், அடிக்கடி ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. வேறு வழியே இல்லாமல் கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸை ஷூட்டிங் ஸ்பாட்டாகவே மாற்றிவிட்டார்கள். அதன் பிறகு ஷூட்டிங் நன்றாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் கார்த்திக், பானுப்ரியாவை ஏமாற்ற காலில் கட்டு போட்டு வீட்டிலே இருந்தார். அப்போது காலில் இருந்த கட்டைப் பார்த்த பானுப்ரியா என்ன ஆச்சு என்றுகேட்க, கீழே விழுந்துவிட்டதாக சொன்னார் கார்த்திக். ஆனால் போடப்பட்டிருந்த கட்டை பார்த்து சந்தேகமடைந்த பானுப்ரியா கட்டை பிரித்து பார்த்தார். அதில் காயம் எதுவும் இல்லை. அது தயாரிப்பாளரையும், பானுப்ரியாவையும் ஏமாற்ற பார்த்த வேலை என்று புரிந்து கொண்டார்கள்.

மேலும், கார்த்திக் சும்மா இருக்காமல், படத்தின் படப்பிடிப்பு ரொம்ப நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதனால், இந்தப் படம் எப்போது வரும் என்று தெரியாது. முதலில் நீ தயாரிப்பாளரிடம் மொத்த பணத்தையும் வாங்கிவிடு என்று கார்த்திக் பானுப்ரியாவை ஏற்றிவிட்டுள்ளார். அவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொண்ட பானுப்ரியா மொத்த சம்பளத்தையும் கொடுத்தால் தான் ஷூட்டிங்கிற்கு வருவேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார். அப்படி கொடுப்பது வழக்கம் இல்லை. உங்களுக்கு முதல் ஷெட்யூல் முடிந்ததும் உங்களுக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டேன். டப்பிங் முடிந்த பிறகு மொத்த சம்பளத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். ஆனால், பானுப்ரியா கேட்பதாக இல்லை. 

முடிவாக முழு சம்பளத்தையும் பானுப்ரியா கேட்கவே, 5 லட்சத்திற்கு டிடி எடுத்த தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு பானுப்ரியா பற்றி கடிதம் ஒன்றை எழுதினார். இதன் காரணமாக மற்ற தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் பானுப்ரியாவை ஒப்பந்தம் செய்யவே தயங்கினார்கள் இதனால் அவரின் சினிமா கேரியரும் பாதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.