தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய், இவரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வில்லனாக மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ அறிமுகமாகியிருந்தார்


 இந்நிலையில், பீஸ்ட் படம் குறித்து டாம்ஷைன் சாக்கோ அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பேட்டி ஒன்றில் பீஸ்ட் படம் குறித்தும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் டாம்ஷைன் சாக்கோவிடம் கேட்கப்பட்டது.  பீஸ்ட் படம் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரீயானது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு டாம் ஷைன் சாக்கோ மிகவும் கிண்டலாக, “ தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரீயாக அமையவில்லை. நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களைத்தான் பார்த்தேன்.” என்றார்.






மேலும்,  விஜய் குறித்து பேசிய அவர் “  ஒருவரை அடித்து தூக்கி வரும்போது அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வரும் நபரின் முகத்தில் ரியாக்ஷன் இருக்க வேண்டும். அதாவது, அவர் சிரமப்படுவது போன்று காட்சி இருக்க வேண்டும். ஆனால், படத்தில் ஒரு பேப்பரைத் தூக்கி வருவது போல விஜய் என்னைத் தூக்கி வருவார். இதற்காக, விஜய் சாரை குறை சொல்ல முடியாது. ஆனால், படக்குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.” என்றார். 


டாம்ஷனின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களையே கோபத்தை ஏற்படுத்தியது. படத்தின் வெற்றி தோல்வி குறித்து சக நடிகரே இப்படி பேசுவது நியாயமானதல்ல என்றும், விஜய் குறித்து பேசிய டாம்ஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலர் கண்டனத்தை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் டாம்ஷன். இது குறித்து இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள அவர், ''மீடியாவில் அப்படி குறிப்பிட்டு பேசியதற்காக வருந்துகிறேன். அது என் தவறுதான். சாரி நண்பன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்