தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் என மிக பெரிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 




படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் இடைவேளை சமயத்தில் தான் என்ட்ரி கொடுப்பார் என கூறப்படுகிறது. அதனால் இந்தியன் 2 படத்தில் குறைந்த அளவிலான நேரம் மட்டுமே தான் வருவார் என்றாலும் படத்தின் அத்தனை கதாபத்திரங்களும் அவரை பற்றியே தான் பேசி கொண்டு இருக்கும் என நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் 'இந்தியன் 3' படத்தில் சேனாபதியின் தந்தை கதாபாத்திரமாக கமல் என்ட்ரி கொடுப்பார் என்ற தகவலும் வெளியானது.







தற்போது படத்தின் பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் லைகா நிறுவனம் 'இந்தியன் 2 ' படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. சேனாபதியின் வர்ம கலை பற்றி சிலாகிக்கும் இந்த வீடியோவில் பாபி சிம்ஹா அவரின் மூன்று சீக்ரெட் பற்றி சொல்கிறார். அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. தியானம் தூக்கம் எல்லாமே மிகவும் பர்ஃபெக்ட்டா இருக்கும். ஒரு வேலை உணவு மட்டும்தான். புலியை போல அவர் ஒரு ட்ரிபிள் 'S'. சீக்ரெட், ஸ்லோ, ஸ்டராங். வெளியாகியுள்ள இந்த வீடியோவில் டெர்ரரான ஒரு கமல்ஹாசனை காணமுடிகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை பல மடங்காக உயர்த்தியுள்ளது.