Indian 2: டப்பிங்கை முடித்த உலகநாயகன்..! விரைவில் ரிலீசாகிறது இந்தியன் 2 டீசர்..?

இந்தியன் 2 படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

இந்தியன் 2 திரைப்படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட தனது காட்சிகளுக்கு  நடிகர் கமலஹாசன் டப்பிங் முடித்துள்ளார். விரைவில் இந்தியன் 2 படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

இந்தியன் 2:

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் 2வின் படப்பிடிப்பு சென்னையில் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான படத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சங்கர். அதே நேரத்தில் படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் கமலஹாசன். இந்நிலையில் இந்தியன் படத்தின் டீசர் விரைவில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தகவலை படக்குழு சார்பில் இருந்து ஒருவர் உறுதிப்படுத்துவதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வரும் படம் இந்தியன் 2. இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்துக் காரணங்களால் சில காலம் படத்தின் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சில காலம் கழித்துத் தொடங்கிய படபிடிப்பு முழு வீச்சில் சென்னை மற்றும் பிற இடங்களில் நடந்து வந்தது.தற்போது படத்தில் பாதிக்கும் மேற்பட்ட படபிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நட்சத்திர பட்டாளம்:

கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானது.இந்தப் படத்தில் கமல் நடித்திருந்த சேனாதிபதி நமக்கு புரியும்படி சொன்னால் இந்தியன் தாத்தா ஆகிய அதே கதாபாத்திரத்தில் தான் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல வேடங்களில் கமலை நான் எதிர்பார்க்கலாம். கமலுடன் இணைந்து காஜல் அகர்வால்,ரகுல் ப்ரீத் சிங்,பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா ஆகிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்..

இந்தியன் 2 ஆம் பாகத்திற்கு பின் கமல் மனிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் 1987 இல் வெளிவந்தது. இதற்குபின்  கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மனிரத்னம் கமல் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார்கள். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.இந்த மூவரின் காம்பினேஷன் எப்படியானதாக இருக்கும் என்று பார்ப்பதர்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பிற்குப் பின் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கலாம்.

ஷங்கரின் கேம் சேஞ்சர்:

சங்கர் இந்தியன் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரனுடன் இணைந்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு கேம் சேஞ்சர் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. ராம் சரனின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Continues below advertisement
Sponsored Links by Taboola