அட்லீ அல்லு அர்ஜூன் காம்போ
ஜவான் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த படத்தை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அட்லீ அல்லு அர்ஜூன் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அல்லு அர்ஜூனின் 22 ஆவது படத்தை அட்லீ இயக்க இருப்பதும் சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
AA22 * A6 படக்குழு
பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் செய்துள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. Spectral motion என்கிற மற்றொரு முன்னணி நிறுவனம் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறது. வித்தியாசமான உயிரினங்களின் தோற்றங்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் பணி. பிரபல ஹாலிவுட் படமான ஹெல்பாய் உட்பட பல படங்களின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தது இந்த் நிறுவனமே . இது தவிர்த்து Fractures FX , ILM technoprops , legacy effects போன்ற முன்னணி விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்க இருக்கிறார் அட்லீ. கேப்டன் அமெரிக்கா , ஸ்பைடர் மேன் , ஐயன் மேன் , அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர்ஸ் ஹீரோஸ் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் கதையை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றுவதை ஒரு சவாலாக அவர்கள் கருதுகிறார்கள்.
ஷங்கர் விட்டதை பிடிக்கும் அட்லீ
தமிழில் அடுத்தடுத்து வசூல் ரீதியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த அட்லீ ஜவான் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது அதி பிரம்மாண்டமாக ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை எடுக்க இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவே அட்லீயின் அடுத்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துள்ளது. இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்பட்டவர் ஷங்கர். அவரைத் தொடர்ந்து அவரது சிஷ்யன் அட்லீ தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.