Dunki Trailer: ஆங்கிலம் தெரியாமல் லண்டன் பயணம்.. ஷாருக்கானின் ‘டங்கி’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

நகைச்சுவையும் அரசியலும் கலந்து ஷாருக் கான் நடிப்பில் ‘டங்கி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

டங்கி

பதான் , ஜவான் போன்ற படங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தற்போது தன்னுடைய அடுத்த ப்ளாக்பஸ்டர் படத்திற்கு தயாராகி விட்டார். ஷாருக் கான் , விக்கி கெளஷல் , டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து, ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகி உள்ள டங்கித் திரைப்படம் இந்த டிசம்பர்  மாதம் 21ஆம் தெதி வெளியாக இருக்கிறது. ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. டங்கி திரைப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது டங்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

டங்கி ட்ரெய்லர்

பஞ்சாப்பை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் லண்டன் செல்ல ஆசைப்படுகிறார்கள்.  தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி தங்களது கனவுகளை நிறைவேற்ற புறப்படும் இந்த இளைஞர்கள் எதிர்பாராத விதமாக அகதிகளாக அலைந்து திரியும் நிலை ஏற்படுகிறது. தங்களது சொந்த நிலத்தை விட்டு அடையாளம் தெரியாத அகதிகளாக இவர்களின் போராட்டம் வழியாக தீவிரமாக ஒரு அரசியலை இந்தப் படம் பேசும் என்று எதிர்பார்க்கலாம். டங்கி படத்தில் ஹார்டி என்கிற கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். மேலும் மனு என்கிற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருக்கிறார். மனுவின் மேல் ஹார்டி கொள்ளும் காதலை மையப்படுத்திய பாடல் ‘லுட் புட் கயா’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது டங்கி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. 

அடுத்தடுத்த ப்ளாக்பஸ்டர்கள்

ஷாருக் கான் நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்த அட்லீ இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படமும் 1000 கோடி வசூல் ஈட்டி ஷாருக் கானை பாலிவுட்டில் வசூல் மன்னனாக அவரை நிலைநிறுத்தியது.

தற்போது டங்கி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகளவில் இருக்கிறது. டங்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் பட்சத்தில் ஒரே ஆண்டில் மூன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நடிகராக ஷாருக் கான் உருவெடுப்ப்பார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola