Jawan Box Office: அடுத்த ஸ்டாப் 1000 கோடிதான்.. இரண்டாவது முறையாக சாதித்துக் காட்டிய ஷாருக்கான்!

பதான் திரைப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆயிரம் கோடி இல்லகை நெருங்கியுள்ளது ஷாருக் கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம்.

Continues below advertisement

அட்லீ இயக்கி ஷாருக் கான் நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தின் வசூல் இன்னும் சில  நாட்களில் ஆயிரம் கோடியை எட்டவிருக்கிறது.

Continues below advertisement

ஜவான்

அட்லீ இயக்கி ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடித்திருக்கும் திரைப்படம் ஜவான். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியாகிய ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி  நேற்றுடன் 15  நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது படக்குழு.

அசர வைத்த முதல் வாரம் வசூல்

ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையைத் தொடங்கியது. வெளியான முதல் நாளில் மட்டுமே கிட்டதட்ட ரூ.129 கோடிகளை வசூல் செய்தது ஜவான் திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சீரான ஓட்டத்தில் 4 நாட்களில் 500 கோடிகள் வசூலை நெருங்கியது ஜவான் திரைப்படம். இதுவரை நான்கு நாட்களில் 500 கோடி வசூல் செய்த ஒரே படம், முன்னதாக ஷாருக் கான் நடித்து வெளியா பதான் திரைப்படம்.  இப்படியான நிலையில் வெளியான முதல் வாரத்திற்குள்ளாக மொத்தம்  ரூ.621 கோடி வசூல் செய்தது ஜவான்.

 இரண்டாம் வாரம்

முதல் வாரத்தைப் போலவே இரண்டாம் வாரமும் ஜவான் திரைப்படத்தில் வசூலில் எந்த வித தொய்வும் ஏற்படவில்லை என்பது இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பையே காட்டுகிறது. இரண்டாம் வாரமாக மொத்தம் 11 நாட்களில் மட்டுமே உலகளவில் மொத்தம் ரூ.858 கோடி வசூல் செய்திருந்தது ஜவான் திரைப்படம்.

இலக்கை எட்டிய ஜவான்

தற்போது நேற்றுடன் மொத்தம் 15 நாட்களை திரையரங்குகளில் நிறைவு செய்திருக்கும் ஜவான் திரைப்படம், இதுவரை ரூ.937 கோடி வசூல் செய்துள்ளது. இனி வர இருக்கும் வார இறுதி நாட்களில் ஜவான் திரைப்படம் 1000 கோடி இலக்கை எட்டி 1000 கோடி வசூல் செய்த இரண்டாவது ஷாருக் திரைப்படமாக இடம்பிடிக்க இருக்கிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola