இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கையைத் தழுவி இந்தியில் எடுக்கப்பட்டுள்ள `சபாஷ் மிது’ படத்தின் ட்ரைலர் பலரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்று வரும் நடிகை டாப்சி இந்தப் படத்திலும் அதே போல தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 


சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள நடிகை டாப்சி தன் மீதான அனைத்து எதிர்பார்ப்புகளையும் `சபாஷ் மிது’ படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். 



மேலும், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை டாப்சி விளையாட்டு மீதான தனது ஆர்வத்தையும் விளையாட்டு வீரர்கள் மீதான தனது மரியாதையையும் குறித்து பேசியுள்ளார். மேலும், தானும் விளையாடுவதாகவும், வீட்டில் ஓய்வு எடுப்பதை விட வெளியில் விளையாடுவதற்காக தனது நேரத்தை செலவிடுவதாகக் கூறியுள்ளார் நடிகை டாப்சி. 






விளையாட்டு மீதான தனது ஆர்வம் குறித்து பேசிய நடிகை டாப்சி, `நான் விளையாட்டு வீரர்கள் பலரின் ரசிகை. என் கல்லூரிக் காலம் வரை நான் அதிகம் திரைப்படங்கள் பார்த்ததில்லை என்ற போதும், என் குழந்தைப் பருவம் முதலே விளையாட்டுகளைப் பின்தொடர்ந்து வருகிறேன். விளையாட்டு வீரர் ஒருவரைக் கண்டால் என் ரசிகத்தன்மை வெளியே வரும். ஏனெனில் நான் அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் அதிகம் மரியாதை வைத்திருக்கிறேன். விளையாட்டு வீரர்களின் ரசிகையாக ஆர்வத்தில் ஏதேனும் குறும்பாக செய்துவிடக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பேன்’ எனக் கூறியுள்ளார். 


`சபாஷ் மிது’ திரைப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 15 அன்று திரையரங்கங்களில் வெளிவருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண