kiruthika annamalai | கல்யாணம் பண்ணிக்கலாமா? என கேட்ட ரசிகர்.. வித்தியாசமாக பதில் கொடுத்த கிருத்திகா..
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா அவ்வப்போது ஃபோட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. அந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக வெள்ளித்திரையில் சில படங்களிலும் தலைக்காட்டினார். குறிப்பாக பேசாத கண்ணும் பேசும் திரைப்படம் மூலம் நடிகர் குணாளுக்கு தங்கையாகவும், ஆண்டான் அடிமை என்னும் படத்தில் நடிகர் சத்தியராஜுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். கிருத்திகா அண்ணாமலை தற்போது பல முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். கிருத்திகா அண்ணாமலை எப்போதுமே குணச்சித்திர கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தக்கூடியவர். என்றாலும் கூட அவர் வில்லியாக நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திவிடும்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல சன் தொலைக்காட்சியில் ,கேப்ரிலா நாயகியாக நடிக்கும் சுந்தரி சீரியலில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா அவ்வபோது ஃபோட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் பெண்களின் சிறு வியாபரத்திற்கு உதவி செய்யும் வகையில் அவற்றை புரமோட் செய்தும் வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கிருத்திகாவிடம், ரசிகர் ஒருவர் “என்னை தயவு செய்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள் “ என கேட்க, அதற்கு நாசுக்காக பதிலளித்த கிருத்திகா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “இவன் என்னோட மகன் சகோதரா“ என பதிலளித்துள்ளார்.
நடிகை கிருத்திகா சாய் என்வரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு 6 வயதில் மகன் உள்ளார். குழந்தை பிறந்ததற்கு பிறகு உடல் எடை அதிகரித்த கிருத்திகா , கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். அது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை மோட்டிவேட் செய்திருக்கிறார்.