சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜீவிதா. முதன் முதலாக மனதில் உறுதி வேண்டும் என்னும் சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். சீரியல்களில் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் கூட கவனம் செலுத்தி வருகிறார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது. ஜீவிதா நேர்காணல் ஒன்றில் மீடியாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
அதில் “ மீடியாவில் இருக்கும் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்டை அட்ஜெஸ்ட் செய்ய சொல்கிறார்கள் அல்லவா. அதே போலதான் சொல்லுவாங்க. அவங்க கொஞ்சம் லோ-லெவல், நாம கொஞ்சம் ஹை-லெவல் அவ்வளவுதான் வித்தியாசம்.அட்ஜெஸ்மெண்ட் ஒன்னுதான். அவங்க பெண்கள் என்றாலே இதற்கு மட்டும்தான்னு நினைப்பாங்களா என்னென்னு தெரியலை.பொண்டாட்டி பிள்ளைகள் இருப்பாங்களானு தெரியல.அம்மாதானே அவங்களையும் பெற்றார்கள் . இன்னும் பச்சையா சொல்லிடுவேன். மீடியாவுல இருக்குறதால நான் அமைதியா இருக்கேன்.இல்லையென்றால் எவனாக இருந்தாலும் என் முன்னால் வந்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நான் இப்போ ஏதாவது பேசினால் தவறாக போய் சேரும் . மேனேஜர்ஸ் மூலமாக நிறைய வரும். சமீபத்தில் கூட ஒரு மேனேஜர் என்னிடம் சொல்லுறார். நான் நினைத்தால்தான் உனக்கு அந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் உனக்கு படத்திற்க்குள்ளேயே போக முடியாது. நான் சரினு சொல்லனும் அப்படினு சொன்னாங்க. அதே மாதிரி சீரியல்ல நடிக்கும் பொழுதும் மிரட்ட செய்வாங்க. காலம் காலமா இப்படி இருக்கு. நான் நடிக்க வந்த காலக்கட்டத்தில் கூட இவ்வளவு இல்லை. இப்போ அதிகமா இருக்கு. சினிமா அழிவை நோக்கிதான் பயணிக்குது. சில நேரங்களில் ஏன் டா நடிக்க வந்தோம்னு தோணியிருக்கு. மேனேஜர்ஸ் சொன்னாதான் அடுத்தக்கட்டத்துக்கு போக முடியும் . அது உண்மைதான். ஆனால் இப்படியான அட்ஜெஸ்மெண்ட் அழைப்புகளால் நிறைய வாய்ப்பு எனக்கு மிஸ் ஆகிட்டுதான் இருக்கு. நிறைய வாய்ப்பும் போயிடுச்சு. ஒரு இயக்குநர் ஆடிஷன் வாங்கன்னு கூப்பிட்டு , மதுரை பக்கத்துல ஷூட்டிங் அப்படினு எல்லாம் பேசிட்டு பக்கத்துல இருக்கும் ஒரு தனி அறைக்கு கூப்பிட்டு போயிட்டு, நீங்க இயக்குநரை அட்ஜெஸ்ட் பண்ணனும், தயாரிப்பளார், ஹீரோ அதன் பிறகு மேனேஜர் இவங்க நாளு பேரையும் அட்ஜெஸ்ட் பண்ணாதான் நீங்க படத்துல இருக்க முடியும்னு சொன்னாங்க. அப்போ அழுதேன். இப்போதும் நடக்குது. ஆனால் கொஞ்சம் தைரியமாக இருக்கேன். அவ்வளவுதான் வித்தியாசம்“ என்றார்.