பாக்கியலெட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் திடீரென சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம், ராஜா ராணி, பாக்யலெட்சுமி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக என்ன நடக்கப்போகிறது என மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது பாக்யலெட்சுமி சீரியல். அழகான குடும்பம் அன்பாக குழந்தைகள் என சென்றுகொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில்,. கணவன் எடுக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவுள்ளது.





ஆம். பாக்யலெட்சுமியின் கணவர், தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துக்கொள்வதற்காக உலகம் தெரியாத மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுகிறார். முன்னதாக பொய்சொல்லி பாக்கியாவிடம் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்தைப் பெற்ற நிலையில் தான் கோபியின் வீட்டுக்கு நோட்டீஸ் வருகிறது. என்ன இருக்கிறது என குடும்பத்தினர் பார்க்க முன்வந்த போது அதனை மறுத்து பிடிங்கி செல்கிறார் கோபி. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த என்ன நடக்கப்போகிறது என தெரிந்துக்கொள்வதில் ஆர்வத்துடன் உள்ளனர். இதனால் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் தொடர்ந்து முன்னணயில் இருந்துவருகிறது.


இந்நிலையில் தான் இந்த சீரியில் பாக்யலெட்சுமி மூத்த மகமான வந்த செழியன் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆர்யன் என்ற செழியனைத் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்திற்கு சூட் ஆகமாட்டார்கள். ஆம் என்ன நடந்தாலும், யாருக்கென்ன கவலை என கண்டுக்கொள்ளாமல் இருக்கும் செழியனுக்கு நெகடிவ் கமெண்ட்கள் வந்தாலும் ரசிகர்கள் மிகவும் இந்த கேரக்டரை ரசித்தனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சீரியலில் இனி வரப்போவதில்லை என்ற அறிவிப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்போது சீரியலில் இருந்து விலகிய இவர், சினிமாவில் வாய்ப்பு தேடவுள்ளதாகவும், இதனால் சீரியலில் நடித்து நேரத்தை வீணக்காமல் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் செழியன் கேர்கடரை இவரைத் தவிர யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்று ரசிகர்கள் பெரும்பாலும் கூறிவரும் நிலையில், யார் நடித்தாலும் நல்ல ரீச் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.



பாக்யலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யன், ஜி தமிழின் செம்பருந்தி சீரியல் நாயகி ஷாபனாவை காதலித்த நிலையில், கடந்த ஆண்டு வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டார். அந்நேரத்தில் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதெல்லாம் வெறும் ரூமர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.