மேலும் அறிய

September Release : மதராஸி முதல் ஓஜி வரை..செப்டம்பர் மாதம் இத்தனை படங்கள் ரிலீஸா!

September month Release : செப்டம்பர் மாதம் தமிழ் , தெலுங்கு , இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் மாதம் தமிழ் தவிர்த்து பிற மொழிகளிலும் முக்கியமான படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ரசிகர்களை திருப்தி படுத்தும் படங்களே மற்ற படங்களைக் காட்டிலும் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் ஈட்ட முடியும் .  செப்டம்பர் மாதம்  தமிழ் , தெலுங்கு , இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம் 

மதராஸி 

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் மதராஸி. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள நிலையில் ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். பிஜூ மேனன் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

காட்டி 

கிரிஷ் ஜகாரலமுடி இயக்கத்தில் அனுஷ்கா , விக்ரம் பிரபு நடித்துள்ள பொலிட்டிக்கல் த்ரில்லர் காட்டி. அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகியது. இப்படத்தைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பின் காட்டி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

பேட் கேர்ள்

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். வர்ஷா பரத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் தொடர் சர்ச்சையில் சிக்கி வந்தது.  அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

கான்ஜூரிங் : லாஸ்ட் ரைட்ஸ்

கான்ஜூரிங் பட வரிசையின்  இறுதி பாகமாக உருவாகியுள்ளது கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ். முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகமும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மைக்கேல் சாவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார் . வேரா ஃபார்மிகா மற்றும் பேட்ரிக் வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகிறது

பாகி 4

இந்தியில் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் பாகி 4. டைகர் ஷெராஃப் சஞ்சய் தத் ,  ஹர்னாஸ் சந்து , சோனம் பஜ்வா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 5 வெளியாகிறது

த பெங்கால் ஃபைல்ஸ் 

தி காஷ்மீர் ஃபைல்ஸ்  , வேக்ஸின் வார் போன்ற சர்ச்சைக்குரிய படங்கள இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள புதிய படம் 'த பெங்கால் ஃபைல்ஸ்''.  1946 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த மதக் கலவரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார், சிம்ரத் கவுர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

ஹால் 

மலையாளத்தில் ஷேன் நிகம் , சாக்‌ஷி வைத்யா இணைந்து நடித்துள்ள படம் ஹால் . வீரா இப்படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மிரை

தெலுங்கில் தேஜாசஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள ஆக்‌ஷன் சாகசத் திரைப்படம் மிரை. கார்த்திக் கட்டம்னேனி இப்படத்தை இயக்கியுள்ளார். பீபள் மீடியா ஃபேக்டரி சார்பாக டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது 

காந்தா 

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி & பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் இணைந்து நடித்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காந்தா. ராணா டக்குபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். செப்டம்பர் 12 திரையரங்கில் வெளியாகிறது

கிஸ் 

சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில்  கவின் நடித்துள்ள படம் கிஸ்.  அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். டாடா பிளடி பெக்கர் படத்தைத் தொடர்ந்து ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரோமியோ பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. 

 

ஜாலி எல்.எல்.பி 3

இந்தியில் இரு பாகங்கள் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஜாலி எல்.எல்.பி 3 ஆம் பாகம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சுபாஷ் கபூர் இப்படத்தை இயக்கியுள்ளார். அக்‌ஷய் குமார் , அர்ஷத் வார்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

OG

பவன் கல்யாண் பிரியங்கா மோகன் நடித்து தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் ஓஜி. செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 

 

 

 

 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget