செப்டம்பர் மாதத்தில் முதல் வாரம் ஓடிடியில் பல்வேறு மொழிகளில் புதிய படங்கள் மற்றும் தொடர்களை வெளியாக இருக்கின்றன. செப்டம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரை வெளியாகும் படைப்புகளில் தமிழ் ரசிகர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான படங்கள் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement

ஜிடிஎன்

மாதவன் நடிப்பில் உருவான ‘ஜிடிஎன்’ திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்திய கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், வினய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதால், வாழ்க்கை வரலாற்றுப் படங்களை விரும்புபவர்களுக்கு இது கவனம் பெறும் வெளியீடாக உள்ளது.

டிசி

லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமான ‘டிசி’ திரைப்படமும் செப்டம்பர் 4ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Continues below advertisement

தி கோர்ட்

நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள ‘தி கோர்ட்’ திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தனது சொந்த தந்தைக்கு எதிராக நீதிக்காக போராடும் பெண் வழக்கறிஞரை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் அமைந்துள்ளது.

காந்தாரி

இதனுடன் செப்டம்பர் 3ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் டாப்ஸி பண்ணு நடித்த ‘காந்தாரி’ வெளியாகிறது. கடத்தப்பட்ட மகளை மீட்க போராடும் தாயை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், ‘தி ஜென்டில்மேன்’ தொடரின் இரண்டாவது சீசனும் செப்டம்பர் 3ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

சின்னத்திரை ரசிகர்களுக்காக ‘பிக் பாஸ் தமிழ்’ 10வது சீசன் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. ஜியோஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை நேரலையாக பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

உன்மதம்

குஞ்சாக்கோ போபன் நடிப்பில் கடந்த ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘Unmadham’ தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. கிரண் தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஷெல்லி நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்குவதும், அந்த விசாரணை அவரை எதிர்பாராத மர்மங்களுக்குள் அழைத்துச் செல்வதும்தான் படத்தின் மையக்கதை. குற்ற விசாரணை, உளவியல் த்ரில்லர் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘Unmadham’, வரும் செப்டம்பர் 4ஆம் தேதி SonyLIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

கொரியன் கனகராஜூ

வருண் தேஜ் மற்றும் ரிதிகா நாயக் நடிப்பில் உருவாகியுள்ள ‘Korean Kanakaraju’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மெர்லபாகா காந்தி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது ஓடிடி ரசிகர்களை சென்றடைய உள்ளது.