சுறா, அழகை மலை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் "லோக்கல் சரக்கு". டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரித்ததோடு பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார் சுவாமிநாதன் ராஜேஷ். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 


நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா :


லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில்  இசையமைப்பாளர் தீனா, இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், சங்கர் கணேஷ், ராதாரவி மற்றும் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். மேலும் படத்தின் நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் படக்குழுவினர் வாழ்த்தியதோடு ஒரு படம் எடுப்பதில் தயாரிப்பாளர் சந்திக்கும் சில சிரமங்கள் குறித்து பேசினார். அந்த சமயத்தில் நடிகர் சென்றாயன் மற்றும் கே.ராஜன் இடையில் மேடையிலேயே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டு கொண்டது மிகவும் வைரலானது. 


 



 


முதலாளிகள் மீது கொண்ட பக்தி:


தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில் ராஜேஷ் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இப்படத்தின் பாடல்களை நான் கேட்டேன் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தன. ராஜேஷ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பயிற்சி பெற்றவர் என்பதால் நிச்சயம் அவரின்  திறமை வெளிப்படும். சங்கர் கணேஷ் தெய்வபக்தி, தேசபக்தி மற்றும் கொண்டவர் அல்ல முதலாளிகள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். அன்றைய காலத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் எல்லாருமே முதலாளிகள் மீது மரியாதையுடன் இருந்தவர்கள்தான். அது போல மரியாதையானவர்களை இன்று பார்க்க முடியாது என்றார். 


மனிதாபிமானம் வேண்டும்:


மேலும் அவர் பேசுகையில் ஒரு தயாரிப்பாளர் எத்தனை லட்சம் பணம் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு படத்திற்கு இசையமைக்க மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு தொகை வசூலிக்கிறார்கள் தெரியுமா. தயாரிப்பாளர்களாக இருந்தவர்கள் பல கோடி ரூபாய் செல்வது செய்து ஒரு படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள். உங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து பாருங்கள். அது தான் நன்றி கடன். ஆனால் யாரும் அதை நினைப்பது கூட இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டு கூறினார்.


படம் எடுப்பது டார்ச்சர் :


தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ராஜேஷிற்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இன்று தயாரிப்பாளராகி விட்டார்கள். ஆனால் இனி நீங்கள் படம் தயாரிக்க கூடாது. 100க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்த ஆர்.பி. சௌத்ரி சொல்லி இருக்கிறார் பாவம் பண்ணவன் தான் பட தயாரிப்பாளனாக வருவான். தமிழ் சினிமா துறையில் மரியாதை இல்லை. பாவம் பண்ணியவன் தான் அங்கு படம் எடுப்பான் என்று கூறியதாக கே.ராஜன் கூறினார். உங்களின் தாய் தெய்வமாய் இருந்து உங்களை ஆசிர்வதிப்பார். இப்போது நீங்கள் படம் எடுக்க வேண்டாம். ஒரு ஐந்து, பத்து படங்களுக்கு இசையமைத்து அதன் மூலம் நன்றாக சம்பாதித்து பிறகு படம் எடுக்க வாருங்கள். படம் கேட்பது ஒரு டார்ச்சர் என மேடையில் கூறினார் கே.ராஜன்.


சென்றாயனுக்கு விழுந்த டோஸ்: 


கே.ராஜன் பேசுகையில் குறுக்கிட்ட நடிகர் சென்றாயன் எங்கள் தயாரிப்பாளர், எங்களின் முதலாளி அவர் படம் எடுத்தால்தான் எங்களுக்கு வேலை என கூறினார். அப்போது மேடையில் அவர் தள்ளி விட்ட கே. ராஜன் "போய் உட்காரு. நங்கள் வேற வேல வாங்கி தரோம்...அவங்களுக்கு வேல இல்லாம ஆகிவிட கூடாது...பெருசா பேச வந்துட்டாரு..." என்றார். பத்து வருஷமா படம் எடுத்தவங்க எங்க? உங்களுக்கு வேல தர்றதுக்காக நாங்க வெளிய போகணுமா? நாங்க வாழ்க்கையை இழக்கணுமா... தயாரிப்பாளராக இருப்பது எவ்வளவு டார்ச்சர் என்பது எங்களுக்கு தெரியும். நடிகனுக்கு தெரியாது. அவர்கள் சுகம் காணுபவர்கள். நீங்க நன்றியோடு இருக்கீங்களா உங்களின் வாய்ப்பு வரும் போது பேசுங்க. நான் பேசும்போது குறுக்கே வராத” என்று மிகவும் கடுமையாக பேசினார் தயாரிப்பாளர் கே. ராஜன். 


முதலில் இசையில் வெற்றி பெறுங்கள்:


மேலும் ராஜேஷிற்கு அறிவுரை கூறுகையில் இசையில் கவனம் செலுத்துங்கள். படம் எடுக்க தொடங்கி விட்டால் மியூசிக் வராது. தனியா கவனம் செலுத்த இயலாது, அதனால் தான் முதலில் இசையில் வெற்றி பெற்ற பிறகு படம் எடுங்கள் என்றார் கே. ராஜன். மேடையில் நடந்த இந்த சண்டை சினிமா வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 






லோக்கல் சரக்கு கதைக்களம்:


ஒரு சாதாரண மனிதன் குடிப்பதற்காக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தனது நண்பனுடன் செல்வதுதான் படத்தின் கதை. கதைக்களம் அதை சுற்றியே நகர்கிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது முழுவதுமாக முடிவடைந்து விட்டது. உபாசனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, சாம்ஸ், வினோதினி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.