“ஒரு நாளில் வாழ்க்கை இங்கு” பாடல் எப்படி உருவானது என்பது குறித்து யுவனும், செல்வராகவனும் கொடுத்த பேட்டியை இங்கு பார்க்கலாம். 


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. ஒரு சாதரண இளைஞன் எப்படி ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறான் என்பதை ரத்தமும் சதையுமாக சொன்ன அந்தப்படம் அப்போது எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற வில்லை என்றாலும், அண்மை காலமாக அந்தப்படம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.


 


                                                         


 


அச்சாணியாக அமைந்த யுவனின் இசை 


படத்தின் பெரும்பலமாக யுவனின் இசை இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தாலும்,  'ஒரு நாளில் வாழ்கை எங்கும்” பாடல் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது என்றே சொல்ல முடியும். வாழ்கையின் அடிநாதத்தை மறைந்த பாடலாசிரியரான நா. முத்துகுமார் வரிகளில் கொண்டு வர, யுவன் அதற்கு தனது குரலிலேயே உயிர்கொடுக்க இன்றும் பலரின் ரிங்டோனாக ஒரு நாளில் இருக்கிறது. 




இந்த நிலையில் இந்தப்பாடல் உருவான விதம் குறித்து, இயக்குநர் செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்கள்.



 


அந்தப்பேட்டியில் யுவன் பேசும் போது, “ அந்த சமயத்தில் ஆங்கில படங்களில் ரோலிங் டைட்டிலில் பாடல்கள் இடம்பெறும். அதே நமது படத்தில் வைப்பதற்கு பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டார். அதற்காக நான் பாடலை கம்போஸ் செய்து வைத்திருந்தேன். அதுதான் ஒரு நாளில் பாடல். ஆனால் பாடலை படத்தில் பார்த்த ஆடியன்ஸ் ஏன் இந்தப் பாடலை விஷூவலாக பதிவு செய்ய வில்லை என்று கேட்டனர். தொடர்ந்து அந்தப்பாடலும் ரீச் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விட்டது.” என்று பேசினார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண