மனுஷ்யபுத்திரன் வசனத்தில் செல்வராகவன், ஐஸ்வர்யா ராஜேஷ்.. புது அறிவிப்பு என்ன தெரியுமா?

மனுஷ்யபுத்திரன் வசனத்தில் செல்வராகவன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணையும் புதிய படத்தை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர்ஸ் திரை தயாரிப்பு நிறுவனம்.

Continues below advertisement

மனுஷ்யபுத்திரன் வசனத்தில் செல்வராகவன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணையும் புதிய படத்தை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர்ஸ் திரை தயாரிப்பு நிறுவனம்.

Continues below advertisement

ட்ரீம் வாரியர்ஸ் திரை தயாரிப்பு நிறுவனம் மக்களைக் கவரும் பல ஜனரஞ்சகமான படங்களையும், அதிரடி சினிமாக்களையும் கொடுத்துள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி என வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைக் கொடுத்திருந்தது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற லைட்டர் வெயின் படங்களும் உண்டும். இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் மான்ஸ்டர் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் இன்னொரு படத்தைத் தயாரிக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனி இடம் உண்டு. காக்கா முட்டை தொடங்கி ஒவ்வொரு படமும் அவருக்கு நடிப்புக்கு தீனி போடும் படமாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷுடன் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், சிட்டி, ஐஸ்வர்யா தத்தா எனப் பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஃபர்ஹானா என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்ட்ர், ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவுத் துறையில் தனித்துவம் பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் வெளியான 'ஒரு நாள் கூத்து', 'டியர் காம்ரேட்', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட சில படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவரின் காதல் பாடல்கள் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகின்றன.

மனுஷ்யபுத்திரன் வசனம்:
ஃபர்ஹானா திரைப்படத்திற்கு பிரபல கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனங்களை எழுதியுள்ளார். கதாசாரியர்கள் சங்கர் தாஸ், ரஞ்சித் ரவீந்திரன் ஆகியோர் இயக்குநர் நெல்சனுடன் இணைந்து வசனம் எழுதியிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க்ஸ் எல்லாம் முடித்து படத்தின் முதல் பாடலை அக்டோபர் 7ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola