“மயக்கம் என்ன” படத்தில் தனுஷின் முகத்தில் இலை வந்து விழும் காட்சி குறித்து இயக்குநர் செல்வராகவன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். 


இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  “மயக்கம் என்ன”. இந்தப்படத்தில் போட்டோ கிராஃபராக வரும் தனுஷின் கார்த்தி கதாபாத்திரம் இன்றும் பலரின் ஃபேவரைட். ஒரு காட்சியில் கார்த்தி காட்டிற்குள் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும் போது, ஒரு இலை அவரது முகத்தில் மெதுவாக வந்து விழும். முழுக்க முழுக்க வசனங்களே இல்லாமல், பின்னணி இசையை மட்டுமே வைத்தே நகரும் இந்தக்காட்சி படத்தில் மிக முக்கியமான காட்சியாகவும், பலருக்கும் பிடித்த காட்சியாகவும் அமைந்தது. இந்தக்காட்சி குறித்து செல்வராகவன் பேசியிருக்கிறார். 


 


                                                   


இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு செல்வராகவன் பேசிய போது, “ அந்த சீனில் நடப்பது போலவே எனக்கும் நடந்து இருக்கிறது. அமைதி அப்படியானதுதான். நான் அமைதியாக இருப்பதால் நான் பேச மாட்டேன் என்று நினைக்கிறார்கள். எனக்குள்ளே நானும் பேசி கொண்டிருக்கிறேன். நானே எனக்கு பதிலையும் கொடுத்துக்கொள்கிறேன். நான் இதை பல இடங்களில் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். உங்களை முதலில் உங்களை நேசியுங்கள். இங்கு எல்லாருக்கும் வேலைகள் இருக்கிறது. அதனால் உங்களுக்காக அருகில் வந்து பேசுபவரிடம் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியாது.


உங்கள் மனசாட்சி 


உங்களின் மனசாட்சிதான் உங்களது எல்லாவற்றையும் தாங்கி வேலை செய்யும். இந்த ஃப்ரேம் ரொம்ப ஸ்பெஷலான மொமண்ட். நமக்கிட்ட நம்மளே பேசிக்கிற இன்னொரு வெர்ஷன்தான், இயற்கையை உணர்வது. எப்பல்லாம் காற்று நம் முகத்தில் மோதுகிறதோ, அப்போதெல்லாம் கடவுள் நம் முகத்தில் வந்து மோதுகிறார் என்று அர்த்தம். அப்படி நினைத்து எடுத்த மொமண்ட்தான் அது. எனக்கு காடு ரொம்ப பிடிக்கும். முதல் இரண்டு படங்களில் காடுகளை சுற்றித்தான் படங்களை எடுத்தேன். முதலில் பயமாக இருக்கும். ஆனா பழகிவிட்டால், அங்கு உங்களது மனம் தன்னைத்தானே புதுபித்துக்கொள்ளும்.”என்று பேசினார்.  


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண