பியோனசே மகள் வென்ற கிராமி விருது
பியோனஸ் மற்றும் ஜே அவர்களின் மகள் ஐவி தனது முதல் கிராமி விருதினை பெற்று உள்ளார். ஒன்பது வயது மட்டுமே நிரம்பிய ஐவி தனது தாய் பியோனஸ் உடன் சேர்ந்து இந்த விருத்தினைப் பெற்றுள்ளார்."பிரவுன் ஸ்கின் கேர்ள்" பாடலுக்காக இந்த விருதினை அவர் பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு வெளியான "தி லைன் கிங்" திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது, இந்த பாடல் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றதோடு பில்போர்டில் முதல் 100 பாடல்கள் பட்டியலில் மூன்று மாதங்களாக இடம் வகித்தது. இந்த பாடல் நிற வேறுபாடு பற்றி மிக ஆழமாக விவரித்த பாடல், அனைவரும் சமம், இங்கு நிறத்தால் ஏதும் வேறுபடுவது இல்லை போன்ற வரிகள் இந்த பாடலுக்கு மிகவும் உயிர் கொடுத்து உள்ளது.
ப்ளூ ஐவி இந்த கிராமி விருத்தினைப் பெரும் இரண்டாவது இளைய வெற்றியாளர். லியா பீசெல், 2002 ஆம் ஆண்டு "O Brother, Where Art Thou?" படத்திற்கான ஒலிப்பதிவு குறித்த தனது பணிக்காக இந்த விருதினை வென்றார். சிறுவயதிலேயே இது போன்ற பெரிய விருதுகளைப் குழந்தைகள் பெறுவது பெரும் மகிழிச்சி அளிக்குறது. இனம் , மொழி, நிறத்தால் அனைவரும் சமம் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் வரவேண்டும். பாராட்டுக்கள் ஐவி.