சந்தோஷ் நாராயணனை பல ஆண்டுகளாக அறிந்திருப்பதால், அவரது பதிவில் இருந்தது வெறுப்பு அல்ல; நண்பர்களுக்கிடையிலான மகிழ்ச்சியான கேலி மட்டுமே என்பது எனக்குத் தெரியும். நாம் அனைவரும் ஒரு நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை கிண்டல் செய்யும் வகையில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், அந்தப் பதிவுக்கு ஷான் ரோல்டன்ஹாஹாஎன கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து சாய் அப்யங்கரின் ரசிகர்கள் ஷான் ரோல்டனையும் விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஷான் ரோல்டன் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் வெளியிட்டிருந்த வீடியோவில், கானா பாடகர் ஒருவர் “Unplugged என்றால் என்ன?” என கேட்கிறார். அதற்கு சந்தோஷ் நாராயணன், “பாட்டு ஹிட் ஆகிடுச்சுன்னு நம்ப வைக்கிறதுக்குஎன பதிலளிக்கிறார். சாய் அப்யங்கர் தனது பாடல்களின் Unplugged வெர்ஷன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதால், இந்தக் கிண்டல் அவரை குறிப்பிட்டே அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதினர். இதனால் சந்தோஷ் நாராயணனின் பதிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் உருவானது.

Continues below advertisement

ஷான் ரோல்டனின் கமெண்ட் 

இந்தப் பதிவுக்கு ஷான் ரோல்டன் “Haha” என கமெண்ட் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, சாய் அப்யங்கரை கிண்டல் செய்யும் பதிவை ஷான் ரோல்டனும் ஆதரிப்பதாகக் கூறி சிலர் அவரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து விமர்சித்தனர். சிலர் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “நான் பொதுவாக கமெண்ட்களை படிப்பதில்லை. ஆனால் சிலர் என்னை டேக் செய்து, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்என ஷான் ரோல்டன் கூறியுள்ளார்.

ஷான் ரோல்டன் விளக்கம்

மேலும், சந்தோஷ் நாராயணனை பல ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும், இருவருக்கும் இடையே உள்ள உறவை அறிந்திருப்பதால் அந்தப் பதிவை வெறுப்பு கொண்ட பதிவாக பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “சந்தோஷை இத்தனை ஆண்டுகளாக அறிந்திருப்பதால், இந்தப் பதிவில் வெறுப்பு எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அது வெறும் மகிழ்ச்சியான கேலி மட்டுமேஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும், அதற்காக அவர்களுக்குள் வெறுப்பு இருப்பதாக அர்த்தமில்லை என்றும் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முற்றிலும் வெறுப்பு இல்லைஎன அவர் கூறியுள்ளார்.

தனது விளக்கத்தின் இறுதியில் “I drink from the well of love” என குறிப்பிட்டுள்ள ஷான் ரோல்டன், அனைவரும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.