கல்லூரி நிகழ்ச்சியில் விஜயின் கட்சி சின்னமான விசில் அடித்து  சத்யபாமா நிறுவனம் விஜய்க்கு தன்னுடய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். விஜய்க்கு வாக்கு திரட்டும் விதமாக கல்லூரி மாணவர்களை மூளைச்சலை செய்யும் விதமான இந்த செயலை பல்கலைகழக மாணிய குழுவினர் கண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பலர் வைத்துள்ளார்கள். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பாஜக , அஇஅதிமுக , பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இன்னொரு பக்கம் காங்கிரஸ் , திமுக , சிபிஐ , சிபிஎம் , விசிக ஆகிய கட்சிகள் கூட்டணியை தொடர்கின்றன. பிரேமலதா விஜயகாந்த் வழிநடத்தும் தேமுதிக மற்றும் விஜயின் தவெக ஆகிய இரு கட்சிகள் இதுவரை தங்கள் கூட்டணியை அறிவிக்காமல் இருந்து வருகின்றன. மாவட்ட வாரியாக ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். 

விஜய்க்கு சத்யபாமா கல்லூரி ஆதரவு 

இந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி பெரியளவில் வாக்கு பிரிவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய வாக்காளர்களான இளம் வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு பெரியளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி கல்லூரி மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரங்களும் நடக்கத் துவங்கியுள்ளன. சென்னையில் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த நிகழ்வொன்றில் கல்லூரி அதிபர் மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது. தவெக தேர்தல் சின்னமான விசில் ஊதி கொண்டாடியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கல்லூரி நிகழ்வொன்றில் பேசிய சத்யபாமா அதிபர் மரியஸினா ஜான்சன் விஜயின் ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சி இந்த கல்லூரியில் எடுக்கப்பட்டதாக கூறினார் . 

கண்டிக்குமா யுஜிசி 

கல்லூரியில் மாணவர்களிடம் அரசியல் கட்சி சார்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட சத்யபாமா கல்லூரி அதிபரை பலர் விமர்சித்து வருகிறார்கள். எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கு ஆதரவாக மாணவர்களை ஊக்குவிப்பது  யுஜிசி விதிமுறைகளை மீறும் செயலாகும். இதனால் சத்யபாமா கல்லூரி உரிமையாளர்களின் செயலை பல்கலைகழக மாணிய குழு கண்டிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

திமுக பகை

செம்மனஞ்சேரியில் சத்யபாமா நிறுவனத்திற்கு ஆக்கிரமித்திருந்த 92 ஏக்கர் நிலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மீட்டது. 20 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த 2000 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை அரசு கைப்பற்றியது. இதன் காரணமாக திமுக மீதான பகையால் விஜயின் தவெக கட்சிக்கு சத்யமாபா நிறுவனம் வெளிப்படையாக தங்களது ஆதரவை தெரிவித்து வருவதாக பலர் கூறி வருகிறார்கள்.