சர்ச்சையில் சிக்கிய சசிகுமார்...மை லார்ட் படத்தை தடை செய்ய கோரிக்கை
ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகாரளிக்கப் பட்டுள்ளது

சசிகுமார் நடிக்கும் மை லார்ட்
குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜூ முருகன் . ஜோக்கர் , ஜிப்ஸி , ஜப்பான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். எளிய மக்களுக்கு எதிரான அதிகார மையத்தை எதிர்த்து தனது படங்களில் அரசியலை பேசி வருபவர் ராஜூ முருகன். ஆனால் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிப்ஸி , ஜப்பான் ஆகிய இரு படங்கள் தோல்வியை தழுவின . தற்போது சசி குமார் நடித்து ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் மை லார்ட். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கன்னட நடிகை சைத்ரா அச்சர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் வெளியான ஒரு சில நாட்களில் படத்தை வெளியிட தடை கோடி சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்ப் பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது
மை லார்ட் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை
மை லார்ட் படத்தை வெளியிட தடை விதிக்கும்படி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாயகன் நாயகி இருவரும் சேர்ந்து புகைப்பிடிப்பது காட்டப்பட்டது. இந்த போஸ்டர் பெண்களை அவமதிக்கும் படி இருப்பதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Just In




சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு கருடன் மற்றும் நந்தன் ஆகிய இரு படங்கள் வெளியாகின. வசூல் ரீதியாக கருடன் படம் பெரியளவில் வெற்றிபெற்றது. அதே நேரம் நந்தன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி , மை லார்ட் ஆகிய இரு படங்களில் அவர் நடித்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் , சிம்ரன் , மிதுன் ஜெய் ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாக ரசிகர்களிடம் பரவலான கவனமீர்த்தது.