எந்த சீசனில் எந்த டெம்ப்ளேட் டிரெண்டாகும் என யூகிக்கவே முடியாததுதான் டிஜிட்டல் காலம். சடாரென்று ஒரு டெம்ப்ளேட் வைரலாக, சினிமா முதல் அரசியல் வரை அனைத்து தகவல்களும் அந்த டெம்ப்ளேட்டில் வந்து போகும். அந்த வரிசையில் இப்போது சிக்கியிருப்பது ‘ரங்கன் வாத்தியார் – கபிலன்’ டெம்ப்ளேட்!
சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானதில் இருந்து இந்த சைக்கிள் டெம்ப்ளேட்தான் டிரெண்ட். நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்களின் வரிசையில் அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர், ’வேம்புலி’ ஜான் கொக்கன் என அவர்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். வாத்தியார் மீம் டிரெண்டுக்கு அதிகாரப்பூர்வ நெட்ப்ளிக்ஸ் கணக்கும் சிக்கிக் கொண்டது.
பிரபல ஸ்பெயின் நாட்டு வெப் சீரீஸான ‘மணி ஹெய்ஸ்ட்’ல் வரும் ப்ரொஃபசர், டோக்கியோ கதாப்பாத்திரங்கள் பேசிக் கொள்வது கேப்ஷன் போட்டு தமிழ் ரசிகர்களின் க்ளாப்ஸ்களை அள்ளியுள்ளது நெட்ப்ளிக்ஸ் ட்விட்டர் பக்கம். மீம் க்ரியேட்டர்கள் சும்மா இருப்பார்களா, அதே மீம்க்கு பசுபதி ரியாக்சனை பதிலாக பதிவிட்டு அட்ராசிட்டி செய்துள்ளனர். மணி ஹெய்ஸ்ட், மாஸ்டர் என போன்ற வாத்தியார் கதாப்பத்திரங்களை நடித்த மற்ற திரைப்படங்களையும் விட்டுவைக்கவில்லை இந்த டிரெண்டு.
பசுபதி டெம்ளேட் டிரெண்டாவது வழக்கமானதுதான். இதற்குத்தான் அசைப்பட்டாயா பாலக்குமாரா, அசுரன், சார்பட்டா பரம்பரை என பசுபதி மீம்ஸ்கள் செம வைரல் ரகம். ஆனால், வெறும் மீம் டெம்ளேட்டாக கடந்து போக முடியாதபடி நடிகர் பசுபதி பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மீம்ஸ்கள் ஆக்கிரப்பதற்கு முன்பே, திருப்பாச்சி ‘பட்டாசு பாலு’, தூள் ‘ஆதி’, வெடிகுண்டு முருகேசன் போன்ற கதாப்பாத்திரங்களிலும் வெயில், மஜா, குசேலன், விருமாண்டி போன்ற படங்களில் சிறந்த குணசித்திர நடிகராகவும் பசுபதி அனைவருக்கு பரிச்சயம்.
சமீப காலமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வரும் பசுபதி ஒரு தேர்ந்த நடிகர், நீங்க நம்புலனாலும் அதான் நெசம்! இன்னும் நிறைய படங்களில் சிறந்த கதாப்பாத்திரங்கள் நடிக்க வாழ்த்துகள் பசுபதி!