பிரபல சின்னத்திரை நடிகையான கம்பம் மீனா மீது பொட்டிக் தொழில் செய்து வரும் பெண் ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் ஓசியில் புடவை கேட்டு விட்டு ஏமாற்றியதாக அப்பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு மீனா பதிலளித்துள்ளார்.
ரசிகர்களிடம் பிரபலமான கம்பம் மீனா
இன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசையெங்கும் ஆடை பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. சம்பந்தப்பட்ட கடையை விளம்பரப்படுத்த பிரபலங்களும் உள்ளனர். அவர்களுக்கு பணம் அல்லது ஆடைகள் கட்டணமாக அளிக்கப்படுகிறது. தாங்கள் வழங்கும் ஆடை எப்படி இருக்கிறது, தங்களிடம் என்னென்ன கலெக்ஷன் உள்ளது உள்ளிட்ட விவரங்களை வீடியோவாக பிரபலங்கள் வெளியிட வேண்டும் என்பது நிபந்தனையாக முன்வைக்கப்படுகிறது.
இப்படியான நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் செல்வி கேரக்டரில் நடித்திருந்தவர் கம்பம் மீனா. இவர் களவாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் சீரியல் தான் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. இவரும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கடைகளுக்கு பிரமோஷன் செய்து வருகிறார்.
ப்ரோமோஷன் செய்ய மறுத்ததாக புகார்
இந்த நிலையில் kanish_designer_studio என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கம்பம் மீனாவை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீனா, தன்னை அணுகி 5 புடவை, ஜாக்கெட் அனுப்பி வையுங்கள். பிரமோஷன் வீடியோ போடுகிறேன் என கேட்டிருந்தார். நாங்கள் முதலில் அதற்கு ரிப்ளை செய்யவில்லை. ஆனால் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டதால் முதலில் புடவை ஒரு செட் அனுப்புகிறோம். நீங்கள் வீடியோ போடுவதை பொறுத்து மீதம் அனுப்புகிறோம் என சொன்னோம்.
இதற்கிடையில் மீனா வீடியோ போடாமல் மீதமிருக்கும் 4 செட் புடவைகளை உடனடியாக அனுப்பி வையுங்கள் என வற்புறுத்துகிறார். நாங்க அனுப்பிய புடவையை நிகழ்ச்சி ஒன்றிற்கு உடுத்தி அதுதொடர்பான வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். ஏன் எங்கள் நிறுவனம் தொடர்பாக குறிப்பிடவில்லை என கேட்டதற்கு அடுத்த புடவை அனுப்புங்க வீடியோ போடுறோம் என சொல்கிறார்.
மேலும் உங்களுக்கு தேவை என்றால் பணம் கொடுத்து வாங்குங்கள். இப்படி ஓசியில் வாங்கி விட்டு ஏமாற்றாதீர்கள் என கடுமையாக அந்த பெண் சாடியிருந்தார்.
மீனா கொடுத்த விளக்கம்
இந்த நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கம்பம் மீனா தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். இன்ஸ்டாகிராம் மூலம் பலரும் என்னை அணுகி ப்ரோமோஷன் செய்ய சொல்றாங்க. அப்படி அந்த பெண்ணும் அறிமுகமானார். நாம் ஒரு புரோமோஷன் செய்யும்போது அதற்கான ஈடான விஷயத்தை கேட்பது வழக்கம் தானே. நானும் அப்படித்தான் செய்து வருகிறேன். இப்படியான நிலையில் அந்த பெண் சில மாதங்களுக்கு முன் சேலை மற்றும் பிளவுஸ் தர சம்மதித்தார். முதலில் ஒரு செட் அனுப்பினார்.
அதற்கு நான் ப்ரோமோஷன் கொடுத்து வீடியோ அனுப்பி விட்டேன். ஆனால் அப்பெண் சொன்னது போல மீதமுள்ள சேலை செட்களை தர மறுக்கிறார். அதனால் நான் அவங்களுடனான தொடர்பை விட்டு விட்டேன். இப்படியான சூழலில் தான் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் ஓசியில் சேலை கேக்குறேன்னு சொல்லிருக்காங்க. இதற்கு விளக்கம் கேட்டு தொடர்பு கொண்டால் போனை கட் பண்ணி விடுறாங்க. அதனால் அப்பெண் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என இருக்கிறேன் என கம்பம் மீனா கூறியுள்ளார்.