கார்த்தி நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சர்தார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
கார்த்தியின் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்