பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான். கரினா கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சைஃப் அலிகானுக்கு ஏற்கனவே சாரா அலிகான் என்ற மகள் உள்ளார். தன்னுடைய நடிப்பு திறமையால் சாரா அலிகான் இந்தி திரை உலகில் முக்கியமான நடிகை ஆக வலம் வருகிறார். ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.


பிகினி போஸ்ட்


இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான், ஒரு பிகினி விரும்பி என்று சொல்லாம். எப்போதும் பிகினி புகைப்படத்தை பதிவிடுவதில் ஆர்வம் காட்டுவார். அவருடைய பிகினி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமும், ஃபாலோயர்ஸ் கூட்டமும் உண்டு. அவர் எப்போது பிகினி புகைப்படம், அல்லது விடியோ பதிவிட்டாலும் எக்ஸ்டரா லைக்ஸ், கமெண்ட்ஸ் இருக்கும். அதே போல தற்போது வெளியிட்டிருக்கும் படத்திற்கு 5 மணிநேரத்தில் 8 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர். வண்ணமயமான பிகினி உடை அணிந்திருக்கும் இந்த புகைப்படத்தில் ஒரு நீச்சல் குளத்தில் நிற்கிறார். இந்த புகைப்படம் இஸ்தான்புல்லில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.




பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தின் வாரிசான இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். இந்தி நடிகர் சைஃயிப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சைஃப் அலி கான், அமிர்தா சிங்கை விவகாரத்து செய்து விட்டு, கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.


சாரா அலிகான் கேதார்நாத் என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்த முதல் படத்திலேயே கலக்கி இருந்தார் சாரா அலிகான். இந்த படம் சில பல பிரச்சினை காரணமாக படம் வெளியாவது சற்று தாமதமானது. படம் தாமதமாக வந்தாலும், இந்த படத்தை பார்த்த அனைவரும் சாரா அலி கானையும் அவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டினர்.



தொடர் வெற்றி


முதல் பட வெற்றியைத் தொடர்ந்து சாரா, ரன்வீர் சிங்குடன் சிம்பா என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், சாராவிற்கு அடுத்தடுத்த படங்கள் குவிய தொடங்கியது. அந்த வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ஆர்யானுடன் லவ் ஆஜ் கல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


ஆத்ரங்கி ரே


வரிசையாக வெற்றிகளைக்கண்ட சாரா அலி கான் வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து 'கூலி நம்பர் ஒன்' என்ற காமெடி படத்தில் நடித்தார். மேலும், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் தனுஷ் உடன் இணைந்து 'அத்ரங்கி ரே' என்ற படத்திலும் நடித்தார். தனுஷுக்கு மூன்றாவது ஹிந்தி படமான இதில், சாரா அலிகான் ஜோடியாக நடித்தார். இப்படத்தில் தனுஷ் மதுரையைச் சேர்ந்த இளைஞராக நடித்து இருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.






June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!