சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில்  நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்து உருவாகியிருக்கும் வெப் சீரிஸான ஹீராமண்டி  சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


ஹீராமண்டி


காவியக் கதைகளை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ராம்லீலா, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது  நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக அவர் இயக்கியிருக்கும் இணையத் தொடர் ஹீராமண்டி (Heeramandi) . சோனாக்ஷி சின்ஹா, ​​ஹுமா குரேஷி, அதிதி ராவ் ஹைதாரி, மனிஷா கொய்ராலா, ரிச்சா சட்டா உள்ளிட்ட நடிகைகள் இத்தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹீராமண்டி என்றால் வைரச் சந்தை. இந்திய சுதந்திரம் போராட்டக் காலத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.






வரலாற்றுக் கதைகளை பிரமாண்டமாகவும் நுட்பமான கதைசொல்லல் முறையையும் திரைமொழியாகக் கொண்ட சஞ்சய் லீலா பன்சாலியின் இந்தப் புதிய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.