நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஜித்குமார்-தமன்னா வீரம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில் விடாமுயற்சியிலும் அஜித்குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
விடாமுயற்சியில் சஞ்சய்தத்:
ஒரு திரைப்படத்தில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வில்லனுக்கும் கொடுக்கப்படுகிறது. விடாமுயற்சியில் யார் வில்லன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கே.ஜி.எப். படத்தில் சஞ்சய் தத் மாஸ் வில்லனாக மிரட்டி இருந்தார். இதனையடுத்து தமிழில் 'லியோ' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது விஜய்யை தொடர்ந்து அஜித் படத்திலும் வில்லனாக நடிக்க வைக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் விடாமுயற்சி:
இந்நிலையில் ரசிகர்களுக்கு 'விடாமுயற்சி' படம் குறித்த குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட படப்பிடிப்பு துபாயிலும், முக்கியமான காட்சிகள் இந்தோனேசியாவிலும் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னையில் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவல் வெளியான நிலையில், விடாமுயற்சி படம் இனி வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
தென்னிந்தியாவில் மாஸ்:
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் சஞ்சய் தத். நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த சஞ்சய் தத், அண்மைக்காலங்களில் முக்கியமான திரைப்படங்களில் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார். கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தில் 2ஆம் பாகத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஆதீராவாக நடித்திருந்தார் சஞ்சய்.
சஞ்சய் தத் நடித்து வரும் வில்லன் கதாப்பாத்திரம் வரிசையில் தற்போது விஜய்யின் லியோ படமும் இணைந்துள்ளதாகவும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்பது பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. முதலில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பின் நடிகர் விஜய்க்கு தந்தையாக அவர் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது. எனவே படம் ரிலீஸ் ஆகும் போது தான் லியோ படத்தின் சஞ்சய் தத்தின் கதாப்பாத்திரம் என்னவென்று தெரிய வரும்.
மேலும் படிக்க