சமந்தா நடித்துள்ள மா இண்டி பங்காரம் படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனின் போது சமந்தா தனது முதல் வேலை குறித்தும் தனது முதல் சம்பளம் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன் நட்சத்திர விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றியதாக சமந்தா தெரிவித்துள்ளார்

Continues below advertisement

ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான சமந்தா இன்று தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமண விவாகரத்து மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் காரணமாக சமந்தா கடந்த 3 ஆண்டுகாலமாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவர் நடித்துள்ள மா இண்டி பங்காரம் திரைப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. சமந்தாவின் ட்ராலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

Continues below advertisement

சமந்தாவின் முதல் சம்பளம் 

இப்படத்தின் ப்ரோமோஷனின் போது சமந்தா தனது முதல் வேலை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது சமந்தா தனது கைசெலவிற்காக சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்ததா கூறினார். மேலும் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களை வரவேற்பாளராக வேலை செய்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். இந்த வேலையில் 8 மணி நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு தான் ரூ500 சம்பளமாக பெற்றதாக அவர் கூறினார்.