நடிகை சமந்தா சமீபத்தில் தனது திருமண உறவிலிருந்து வெளியில் வந்தார். நாக சைதன்யாவை பிரிந்த பிறகு மன ரீதியாக சோர்வடைந்து தனது அவரது வளர்ச்சியில் இழப்பை சந்திப்பார் என்று பரவலாகவே பேசப்பட்டது. ஆனால் அந்த பேச்சுக்களை எல்லாம் சமந்தா தனது செயல்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்.


ஹாலிவுட் படத்தில் கமிட்டாகியிருக்கும் சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் தெலுங்கிலும் படங்களில் கமிட்டாகிவருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா படத்தில் ”ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா” என்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கும் சமந்தாதான் கடந்த சில நாள்களை சென்சேஷனல் டாபிக்.




இதற்கிடையே சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என பரவிய தகவல்களை அவரது மேலாளர் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா 2018-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் விழாவில் பேசியிருந்த வீடியோ ஒன்றை சமந்தா தற்போது பகிர்ந்துள்ளார்.






அந்த வீடியோவில் பெண்கள் இப்படித்தான் பேச வேண்டும். பெண்கள் இதை அணிய வேண்டும். இந்த நேரத்தில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று எப்போதும் பிறரால் சொல்லப்படுகிறது. 


நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். என் சொந்த முடிவுகளை எடுக்கும் திறனை எனக்கு கொடுங்கள். நீண்ட காலமாக ஆண்களுக்கு இதே மாதிரியான சுதந்திரம் இருந்தது” என்று பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்கு சமந்தா ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Thangamani DVAC Raid: கிரிப்டோவில் தங்கமணி முதலீடு செய்ய காரணம் என்ன? ஆதாரங்கள் எங்கு இருக்கும்?