சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் , தெலுங்கில் சகுந்தலா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. விவாகரத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா  தனது நாய்க்குட்டி , நண்பர்கள் , விடுமுறை கொண்டாட்டம் , உடற்பயிற்சி என தனக்கான நேரத்தை அதிகமாக செலவிட்டு வருகிறார். விவாகரத்து விஷயத்தால் ஹாட் டாப்பிக்கில் இருந்த சமந்தா பின்னர் ஒரே பாடல் மூலம் இந்தியா முழுவதும் வைரலானார். அவ்வபோது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் சமந்தா. இந்நிலையில் மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்றும், சொந்த வாழ்க்கையில் தான் மீண்டு வந்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் சமந்தா.





மன ஆரோக்கியம் தொடர்பான தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா. அப்போது பேசிய அவர், மன ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், '' மன நலம் சார்ந்த பிரச்னையில் இருக்கும் போது மீண்டு வருவதற்கான உதவியை பெறுவதில் தடையோ, தயக்கமோ இருக்கக் கூடாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை மன நல பிரச்னையில் இருந்து மீண்டு வர நண்பர்களும், மருத்துவர்களுமே உதவி செய்தனர். மனம் நலம் சார்ந்த பிரச்னையில் மருத்துவரை அணுகுவது மிகவும் சாதாரணமானது. உடல் நிலை பிரச்னை என்றால் எப்படி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கிறோமோ, அப்படித்தான் மன நல பிரச்னைக்கும். நம் மனம் காயமடைந்தால் மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.


மேலும் பேசிய அவர், “என் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் நான் வெற்றி பெறுகிறேன் என்றால், அது நான் வலுவாக இருந்ததால் மட்டுமே அல்ல. என்னைச் சுற்றியிருந்த பலர் நான் வலுவாக இருக்க உதவியதால் தான். பலர் நான் மீண்டு வர எனக்கு உதவியாக இருந்தனர்” என்றார்.






சில நாட்களுக்கு முன்பு சமந்தா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் சமந்தா சோம்பலாக சோஃபாலில் சாய்ந்துக்கொண்டிருக்க, அருகில் நடிகர்கள் வெண்ணெலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா ஆகியோர்  சோஃபாவில் அமர்ந்திந்தனர். இதனை பகிர்ந்த சமந்தா “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் “ என குறிப்பிட்டு அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தார்.