தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. இவர் கடந்தாண்டு ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடுமையான உடல்நலக்குறைவு, முதல் திருமண வாழ்க்கை முறிவுக்கு பிறகு இவர்களது திருமணம் நடைபெற்றது. 

Continues below advertisement

தாயாகிய சமந்தா:

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சமந்தா தற்போது குணமாகி மீண்டும் நடித்து வருகிறார். இந்த சமந்தா - ராஜ்நிடிமோரு தம்பதியினருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தற்போது கருவுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பான தகவல் தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. 

Continues below advertisement

குவியும் வாழ்த்துகள்:

அந்த வீடியோவில் அனைவரும் புடைசூழ சமந்தாவிற்கு வாழ்த்துகள், வாழ்த்துகள் என்று வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதற்கு சமந்தா அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார். பின்னர், அவர்கள் சமந்தாவிற்கு கேக் வெட்டுகின்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது அவரது கணவர் ராஜ் உடனிருந்தார். இது அவர் கருவுற்றதற்காக கொண்டாடப்பட்டது என்று தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

பிரபலம்:

கடந்த 2010ம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படம் மூலமாக சிறிய வேடத்தில் அறிமுகமான சமந்தா பாணா காத்தாடி மூலமாக பிரபலமானார். அதேசமயம் தெலுங்கிலும் அவர் வளரத் தொடங்கினார். தமிழில் நீதானே என் பொன்வசந்தம், தெறி, மெர்சல் போன்ற படங்கள் மூலமாக மிகவும் புகழ்பெற்றார். தெலுங்கில் தூக்குடு, நான் ஈ, மனம் ஆகிய படங்கள் மூலமாக பிரபலமானார். பின்னர், புஷ்பா படத்தில் இடம்பெற்ற ம்ம் சொல்றியா பாடல் இவரை இந்தியா முழுவதும் புகழ்பெற வைத்தது. தற்போது அவரது நடிப்பில் மா இன்தி பங்காரம் படம் வெளியாகியுள்ளது. 

சமந்தா தாயாக இருப்பதாக தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் தி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.