Samantha Ruth Prabhu | என்னோட முதல் குழந்தை அங்க.. நானோ இங்க.. சோகத்தில் சமந்தா..

தன்னுடைய முதல் குழந்தை சோகத்தில் தவிப்பதாக நடிகை சம்ந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

நடிகர் நாக சைதன்யா உடனான விவாகரத்தும், அது குறித்து சமூக வலைதளங்களில் உலாவி வந்த வதந்திகளும் சம்ந்தாவை மிகவும் பாதித்து விட தனது நெருங்கிய தோழியுடன் கேதார்நாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார் சமந்தா. 

Continues below advertisement

அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்தார். என்னினும் சமந்தா  பற்றிய வதந்திகள் ஓய்ந்த பாடில்லை. இதனால் கடுப்பான சமந்தா வதந்திகள் பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர்தார். முன்னதாக கணவர் பிரிவில் இருந்து வெளியேற சிறிது காலம் தேவைப்படும் எனக் கூறிய சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். 

தற்போது சென்னையில் வசித்து வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் இரண்டு போட்டோக்களை பகிர்ந்தார்.


அதில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே மழை பெய்யும் ஒரு போட்டோவும், தனது செல்லப்பிராணிகளான ஹாஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படமும் இருந்தது. இதில் நாய்கள் இருக்கும் புகைப்படத்தில், “ நான் ஒரு நாள் இல்லை.. ஒரு நாள்... என்னோட முதல் குழந்தை சோகத்தில்” என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தா தனது செல்லப்பிராணிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே அறிந்து கொள்ள முடியும். 

 


 

 

அதில் தனது செல்லப்பிராணிகளுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமந்தா அவ்வப்போது பகிர்வார். இந்த நிலையில் அவர் பதிவிட்ட இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. 

சமந்தா தற்போது தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் பை லிங்குவல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. 

அதே போல நடிகை டாப்ஸி தயாரிக்கும் புதிய இந்தி  படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சமந்தா தற்போது சில வெப் தொடரிலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல இயக்குநர்கள் சமந்தாவின் கால்ஷீட்டிற்காக காத்திருப்பதால் தனது சம்பளத்தை  உயர்த்தவும் திட்டமிட்டுள்ளாராம். அதன் அடிப்படையில் சமந்தாவின் சம்பளம் 4 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola