தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவரும் இவரது முன்னாள் கணவரும் நடிகருமான நடிகர் நாக சைதன்யாவும் ஒரே விழாவில் கலந்து கொண்டது தற்போது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக உள்ளது. 


அமேசான் பிரைம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இருவரும் அமேசான் பிரைமுடன் இணைந்து அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்ட ப்ரோஜக்ட் தொடர்பான அறிமுக விழாவில் கலந்து கொண்டனர். இதில் நடிகை சமந்தா ஹனி பனி என்ற வலைதளத் தொடர் அதாவது சீரியஸில் நடிக்கின்றார். இதில் இவர் வருண் தவானின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த ஹனி பனி வெப் சீரியஸானது, கடந்த ஆண்டு வெளியான சிடாடல் தொடரின் இந்தித் தழுவலாலும். இந்த சிடாடல் சீரியஸின் ஆங்கில வடிவத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும், ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா கலந்து கொள்ள முக்கிய காரணம், அவர் நடித்து வெளியான மிகவும் முக்கியமான வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்த தூத்தா வெப் சீரிஸின் வெற்றியை கொண்டாடும் விதமாக கலந்து கொண்டார். இதுமட்டும் இல்லாமல் இந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது. 


அமேசான் பிரைம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு ஒரு பெரிய கொண்டாட்டமாக பார்க்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் அமேசான் பிரைம் அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் புதிய நிகழ்ச்சிகள் குறித்து வரிசையை வெளியிட்டனர். பல ஆண்டுகளாக ஒன்றாக தோன்றாத நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்த மேடையில் தோன்றிய சிறப்பு தருணம் இது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டிருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 






நாக சைதன்யா  தனது அடுத்த படத்தில் சந்து மொலேட்டி இயக்கத்தில் வரும் தண்டேல் படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கின்றார். ஸ்ரீகாகுளத்தில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகின்றது.  இந்த படத்திற்காக நாக சைதன்யா தன்னை மாற்றிக் கொள்ளவும், தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தவும் நிறைய முயற்சிகளை எடுத்துள்ளார் என தெலுங்கு திரை உலகில் பாராட்டினைப் பெற்று வருகின்றார்.