சமூக வலைத்தளங்களை திறந்தாலே சமந்தா, நாக சைத்தன்யாவின் பிரிவு செய்தியாகவே உள்ளது. டோலிவுட்டின் Most Romantic Couples ஆக இருந்தவங்களுக்கு என்னதான் ஆச்சு ? ஏன் திடீரென இப்படி முடிவெடுத்துட்டாங்க என இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகர்ஜூனாதான் என கூறப்படுகிறது. முன்னதாக சமந்தா கிளாமராக நிறைய ஃபோட்டோஷூட் செய்வது நாக சைத்தன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம். அப்போதே சமந்தாவிற்கும் குடும்பத்தினருக்குமிடையில் மனவருத்தமிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியான ஃபேமிலி மேன் தொடரில் , போல்டாக சில காட்சிகளில் நடித்திருந்தார் சமந்தா. அதனை பலர் பாராட்டினாலும் நாகர்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லையாம். இந்நிலையில் முன்னதாக இருந்த பிரச்சனை கூடுதலாக புகைய தொடங்கவே, இது சமந்தாவிற்கும் நாக சைத்தன்யாவிற்குமிடையில் கூடுதல் விரிசலை ஏற்படுத்தி விவாகரத்துவரை சென்று விட்டது என சில டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமந்தா நாகசைத்தன்யா இருவரும் சமூக ஊடகங்களில் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் சில செயல்பாடுகள் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. முதலில் சமந்தா சமூக வலைத்தளங்களில் அக்கினேனி என்னும் நாகர்ஜூனாவின் குடும்ப பெயரை மாற்றினார். ஃப்ரீ டைமில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சமந்தா , சமீப காலமாக அதனை தவிர்த்துவிட்டார். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற அவரிடன் இந்த செய்திகள் குறித்த உண்மைத்தன்மையை செய்தியாளர் கேட்டதற்கு ‘ அறிவு இருக்கா’ என அவரிடம் சீரினார். அதேபோல நாக சைத்தன்யாவும் ‘லவ் ஸ்டோரி’ தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது சமந்தா குறித்து கேட்ட கேள்விக்கு ’நான் இங்கு படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ளேன் ! படம் குறித்த கேள்வியை மட்டுமே கேளுங்கள் ‘ என காட்டமாக தெரிவித்தாராம்.