விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையில் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை நயன் - விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுவும் இளைஞர்கள் பட்டாளம் இப்படத்தைக் கொண்டாடி வருகிறது.
இந்தப் படம் சமந்தாவின் பிறந்தநாளான நேற்று திரைக்கு வந்தது. சமந்தாவின் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார். அதில் நயன்தாராவை வெகுவாகப் புகழ்ந்துள்ளார் சமந்தா. நயன்தாரவை அடிச்சுக்க முடியாது. நான் என் வாழ்வில் சந்தித்த மிகக் கடுமையான உழைப்பாளி என்று பாராட்டியுள்ளார். மக்களை சிரிக்க வைக்கும் படத்தில் ஒரு பார்ட்டா இருந்திருக்கேன். ரொம்ப யோசிக்காதீங்க. வீக்கெண்ட்ல உங்க பிரச்சினைகளை விலக்கி வைத்துவிட்டு வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும், அனிருத் ஒரு ஜீனியஸ் என்றும் தனக்குப் பிடித்த பாடல் டப்பம் டிப்பம் பாடல் தான் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், லவ், ஹேட் எல்லாத்திலும் விலகி நிற்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கதீஜாவுக்குக் கிடைக்கும் வரவேற்பு தான் எனது பிறந்தநாள் பரிசு என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் கதைச் சுருக்கம் இதுதாங்க...
விஜய் சேதுபதியின் (ராம்போ) குடும்பத்தின் மீது சாபம் இருக்கிறது. இதனால், அந்த குடும்பத்தில் உள்ள யாருக்கும் திருமணம் நடக்காமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்த களங்கத்தை நீக்க வேண்டும் என்று நினைத்த விஜய் சேதுபதியின் தந்தை, ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு 'ரஞ்சன்குடி முருகேச பூபதி ஒஓதிரன்' என்கிற ராம்போ குழந்தையாக பிறக்கிறார். ராம்போ பிறந்த அதே நாளில் அவர்களின் குடுபத்தின் மேல் உள்ள சாபத்தினால் ராம்போவின் தந்தை மரணமடைகிறார். கணவரின் மரணத்தை கேள்விப்படும் ராம்போவின் தாய்க்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால், தனது மகனை தவிர்த்து அனைத்து விஷயங்களையும் மறந்துவிடுகிறார். அதிரிஷ்டம் இல்லாதவன் என்ற பெயருடன் திரியும் ராம்போவுக்கு காத்துவாக்குல் ரெண்டு காதல் செட்டாகுது. அதில் ஒருவர் கண்மணியாக வரும் நயன்தாரா, இன்னொருவர் கதீஜாவாக வரும் நயன்தாரா. இருவர் மீதும் காதல் கொள்கிறார் வியஜ் சேதுபது. ஒரு கட்டத்தில் காதலிகளுக்கும் தெரியவர என்னவாகிறது என்பதுதான் கதை.
இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த் நடித்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹர்பஜன் சிங், பிராவோ உள்ளிட்டோரும் திரையில் தோன்றியுள்ளனர். இந்தப் படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் நான்காவது கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.