அபுதாபியில் நிகழ்ந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவான  iifa வில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாடிகார்ட் நடிகர் விக்கி கெளஷலை தள்ளிவிட்ட வீடியோ பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இதுகுறித்து விக்கி கெளஷல் விளக்கமளித்துள்ளார்.


இது குறித்து விளக்கமளித்த விக்க கெளஷல் ”சில நேரங்களில் நாம் காணொளிகளை மட்டுமே வைத்து தவறான கருத்துக்களை வளர்த்துக்கொள்கிறோம். அவை எல்லாம் உண்மையில்லை. இப்படியான விஷயங்களைப் பற்றி பேசுவதில் எந்தப் பயணும் இல்லை” என இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்கி. மேலும் சல்மான் கான் விக்கி கெளஷலிடம் சென்று அவரை கட்டிப்பிடித்து இந்த சூழ்நிலையை இயல்பாக்கினார்.






சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவான iifa விருதுகள் இந்த ஆண்டு துபாயில் நேற்று நடைபெற்றது. இந்தியத் திரைப்பட நடிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.மேலும் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொண்ட சல்மான் கான் அவசரமாக நடந்துகொண்டிருந்த போது அவரது பாடிகார்ட்ஸ் அவருக்கு வழிவிட்டு வந்தனர். அப்போது வழியில் நின்றிருந்த விக்கி கெளஷலை அவர்கள் தள்ளிவிட்டனர்.இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைதளத்தில் பரவலாகி வந்தது.


விக்கி கெளஷலின் மனைவியான கட்ரீனா கைஃபை பாலிவுட்டில் அறிமுகம் செய்ததது சல்மான் கான். மேனே பியார் க்யு கியா படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார் கட்ரினா கைஃப்.இதனைத் தொடர்ந்து பூம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சல்மான் கான் கட்ரீனா கைஃப் இருவரும் சிறிது காலம் டேட் செய்துவந்ததாக தகவல் வந்தன.இருவரும் சேர்ந்து எக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹே, பார்ட்னர் , யுவ்ராஜ் ஆகியப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தனர். பின் சிறிது காலம் இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விக்கி கெளஷலை திருமணம் செய்துகொண்டார் கட்ரினா கைஃப்.


சல்மான் கானின் தங்கையான அர்பிதா கானுடன் நீண்ட நாள் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார் கட்ரினா. இந்த ஆண்டு ஈகை பண்டிகை அன்று அர்பிதாவின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார் கட்ரினா. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.


மசான் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்திற்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றார் விக்கி கெளஷல்.இதனைத் தொடர்ந்து அனுராக் கஷ்யப் இயக்கிய மன்மர்ஜியான் படத்தில் டாப்ஸியுட நடித்தார் விக்கி. பாலிவுட்  நடிகர்களில் முக்கியமான நடிகர்களின் பட்டியலில் விக்கி கெளஷலின் பெயர் நிச்சயமாக இருக்கும். நடிகராக இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக பண்பானவராக அறியப்படுபவர் விக்கி கெளஷல்.