கடந்த 2012-ஆம் ஆண்டு சல்மான் கான் மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் வெளியான ‘ஏக் தா டைகர் ‘ திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் வேட்டை நடத்தியது. இந்த இரண்டு படங்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது. படத்திற்கு ‘டைகர் 3’ என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்திலும் சல்மான் கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் நடித்து ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். மணீஷ் சர்மா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையின் முக்கியமான பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் நேற்று அதிகாலை ரஷ்யா சென்றுள்ளனர். அப்போது விமான நிலையத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைகர் 3 படத்திம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக கார்கள் நிறைந்த சேசிங் காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.கொரோனா சூழல் காரணமாக ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது . ரஷ்ய அதிகாரிகள் படப்பிடிப்பிற்கு முறையான ஒத்துழைப்பு அளிப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் ஷூட்டிங் முடித்தவுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக துருக்கி மற்றும் ஆஸ்திரியாவிற்கு பறக்க உள்ளனர் படக்குழுவினர். படத்தில் சல்மானுக்கு வில்லனாக இம்ரான் ஹஸ்மி நடித்து வருகிறார். படத்தை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இது ஒரு புறமிருக்க நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி, கதைகேட்ட சல்மான். கதையில் தனக்கு திருப்தி இல்லை என அப்படத்தில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.