பாலிவுட் முன்னணி ஸ்டார் சல்மான் கான் நடிகை பூஜா ஹெக்டே உடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பது தான் தற்போது பாலிவுட்டில் பரவி வரும் ட்ரெண்டிங் நியூஸ். 


 



 


டேட்டிங் செய்யும் சல்மான் - பூஜா ஹெக்டே :


நடிகர் சல்மான் கான் - நடிகை பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து சல்மான் கான் பிலிம்ஸ் பேனரின் கீழ் பர்ஹாத் சஞ்சி இயக்கி வரும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி சல்மான் கான் உடன் இணைந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே என கூறப்படுகிறது.


வெளிநாட்டு திரைப்பட விமர்சகரான உமைர் சந்துவின் பதிவின் படி, 'மெகா ஸ்டார் சல்மான் கான் பூஜா ஹெக்டே மீது காதல் வயப்பட்டுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனம் பூஜா ஹெக்டேவை அடுத்த இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிட்டு வருகிறார்கள் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது' என ட்வீட் செய்துள்ளார். 32 வயதான பூஜா ஹெக்டே 56 வயது சல்மான் கானுடன் டேட்டிங் செய்து வருகிறார் எனும் இந்த தகவல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.  


 







ரசிகர்கள் கொந்தளிப்பு : 


இதுவரையில் தனிமையில் இருந்து வந்த பூஜா ஹெக்டே தன்னை விட 24 வயது மூத்தவரான சல்மான் கானுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகிறது. இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும் இந்த செய்தியால் பூஜாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். 


இது முதல் முறை அல்ல :


இதற்கு முன்னர் நடிகர் சல்மான் கான் பல பல முறை சக நடிகைகளுடன் டேட்டிங் செய்து வந்ததாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள். தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பரவி வரும் இந்த வதந்தி அதிகாரப்பூர்வமானது இல்லை என்பதால் யாரும் இதை நம்புவதாக இல்லை. 


வதந்திகள் உண்மையா ? 


உமைர் சந்து கடந்த காலங்களில் பல சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டுள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வதந்திகள் என்பதால் யாரும் அவரின் பதிவின் மீது நம்பிக்கை இல்லாமல் நிராகரித்து வருகிறார்கள். மேலும் இது போன்ற அவதூறான தகவல்களை பரவி வருவதால் வெளிநாட்டு விமர்சகர் உமைர் சந்துவை கிழித்து வருகிறார்கள் ரசிகர்கள்.